PIB Headquarters
azadi ka amrit mahotsav

விவசாயிகளுக்கு திறன் மேம்பாடு மற்றும் பயிற்சி மூலம் அதிகாரமளித்தல்

Posted On: 30 SEP 2025 11:19AM by PIB Chennai

இந்தியாவின் வேளாண் தொடர்பான உத்திசார் நடவடிக்கைகளில் விவசாயிகளுக்கு அதிகாரமளிப்பது முக்கியத்துவம் வாய்ந்த பணியாக உருவெடுத்து வருகிறது.  கிராமப்புறங்களில் வசித்து வரும் மூன்றில் இரண்டு பங்கு மக்களில் பாதி பேர் விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பை சார்ந்துள்ளனர். எனவே, விவசாயிகளின் திறனை வலுப்டுத்துவது உள்ளடக்கிய மற்றும் நீடித்த வளர்ச்சிக்கு அவசியமான நடவடிக்கையாக உள்ளது. கடன் உதவி பெறுவது, இடுபொருள்கள், பருவநிலையில் ஏற்படும் மாற்றம், மண்வள மேலாண்மை, இயந்திரமயமாக்கல் நடவடிக்கைகள், சிறந்த சந்தை வாய்ப்புகளைப் பெறுதல் போன்ற பல்வேறு சவால்களை விவசாயிகள் எதிர்கொண்டு வருகின்றனர்.

இதனை விவசாயிகளுக்கு அதிகாரம் அளிக்கும் வகையில் திறன் மேம்பாடு மற்றும் பயிற்சிகளை வழங்க கிராமப்புற வளர்ச்சித் திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. பல்வேறு நடவடிக்கைகள் காரணமாக விவசாயிகள், நவீன வேளாண் தொழில்நுட்பங்கள் உள்ளிட்ட பல்வேறு திறன்களைப் பெற்றுள்ளனர்.

நாட்டின் வேளாண்துறையை வலுப்படுத்தும் வகையில் வேளாண் தொழில்நுட்ப மேலாண்மை முகமை நாடு முழுவதும் சீர்திருத்த நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது.  2021-22-ம் ஆண்டில் இந்த முகமை மூலம் 32.38 லட்சம் விவசாயிகள் பயிற்சி பெற்றுள்ளனர். இந்த எண்ணிக்கை 2022-23-ம் ஆண்டில் 40.11 லட்சமாகவும், 2023-24-ம் ஆண்டில் 36.60 லட்சமாகவும் 2024-25-ம் ஆண்டில் ஜனவரி 30-ம்  தேதி வரை 18.30 லட்சமாகவும் உள்ளது.

வேளாண்துறையில் அதிகரித்து வரும் வாய்ப்புகளை இளைய தலைமுறையினர் பயன்படுத்திக் கொள்ளும் வகையிலான நடவடிக்கைகளுக்கு மத்திய அரசு சிறப்பு கவனம் செலுத்தி வருகிறது.    

பயிர் செய்வதற்கான திட்டமிடல் மற்றும் உரமிடுதல் போன்ற பணிகளுக்கு உதவுவதில் மண்வள அட்டை திட்டம் முக்கிய பங்கு வகிக்கிறது. நாடு முழுவதும் கடந்த ஜூலை 24-ம் தேதி வரை 25.17 கோடி மண்வள அட்டைகள் விநியோகிக்கப்பட்டுள்ளன.   

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2172960

***

SS/SV/RJ


(Release ID: 2173148) Visitor Counter : 8
Read this release in: English , Urdu , Hindi , Gujarati