பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பாதுகாப்பு கணக்குகள் துறையின் 278-வது ஆண்டு கொண்டாட்டத்தில் பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் பங்கேற்கவுள்ளார்

Posted On: 30 SEP 2025 12:44PM by PIB Chennai

புதுதில்லியில் 2025 அக்டோபர் 1 அன்று நடைபெறவுள்ள பாதுகாப்பு கணக்குகள் துறையின் 278-வது ஆண்டு கொண்டாட்டத்தில் பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் பங்கேற்கவுள்ளார். பாதுகாப்பு அமைச்சகத்தின் சீர்திருத்தங்கள் ஆண்டு முன் முயற்சியின் ஒரு பகுதியாக, பாதுகாப்பு கணக்குகள் கட்டுப்பாட்டு அதிகாரியின் நிறுவனத் திறனை மேம்படுத்துவதை நோக்கமாக கொண்டு புதிய பதிப்புகளை பாதுகாப்பு அமைச்சர் வெளியிடவுள்ளார். இவை பாதுகாப்பு சேவைகளை நவீனமயமாக்கல், வெளிப்படை தன்மையை மேம்படுத்துதல் மற்றும் சிறந்த ஆதரவு என்ற துறையின் உறுதிப்பாட்டை சுட்டிக்காட்டுகிறது.

இந்நிகழ்ச்சியில் துறை ரீதியான முக்கிய திட்டங்கள் மற்றும் சீர்திருத்தங்களின் சிறந்த பங்களிப்பை வழங்கிய பாதுகாப்பு கணக்குகள் கட்டுப்பாட்டு அலுவலகத்தின் பணியாளர்களுக்கு திறன் மேம்பாட்டு விருதுகளை திரு ராஜ்நாத் சிங் வழங்குகிறார். பாதுகாப்பு நிதி மேலாண்மையில் புதுமை கண்டுபிடிப்பு, தொழில் திறன் மற்றும் திறனில் இத்துறையின் உறுதிப்பாட்டை இந்நிகழ்ச்சி எடுத்துக்காட்டும்.

***

(Release ID: 2172995)

SS/IR/AG/RJ


(Release ID: 2173141) Visitor Counter : 5