பெண்கள் மற்றும் குழந்தை நலன் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

8-வது ஊட்டச்சத்து மாத கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, மத்தியப் பிரதேசத்தில் பல்வேறு சுகாதார நடவடிக்கைகள் மற்றும் ஆலோசனை அமர்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன

Posted On: 29 SEP 2025 3:03PM by PIB Chennai

மத்தியப் பிரதேசம் மாநிலம் பர்வானி மாவட்டத்தின் பதி தொகுதியில் உள்ள அங்கன்வாடி மையம் கரியா பாலியா செம்லியில், அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் துணைச் செவிலியர்கள் இணைந்து, அத்தியாவசியமான 1000 பொன்னான நாட்களில் குழந்தை வளர்ச்சியில் ஆண்களின் பங்களிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக முக்கிய சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்து தலைப்புகளில் அமர்வுகள் நடைபெற்ற.

குழந்தைகளுக்கு அல்பண்டசோல் மாத்திரைகள் விநியோகிக்கப்பட்டன, மேலும் குடல் புழு நீக்கத்தின் முக்கியத்துவம் மற்றும் சுகாதாரப் பழக்கவழக்கங்களைப் பேணுவது குறித்து ஆலோசனை வழங்கப்பட்டது.

தாமோ மாவட்டத்தின் பத்ரி சஹஜ்பூரில், போஷன் தாலி செய்முறை விளக்கத்தில், முருங்கை கீரை பராத்தாக்கள் இடம்பெற்றன. இது முருங்கையின் ஊட்டச்சத்து நன்மைகளை எடுத்துரைத்ததுடன், குழந்தைகளுக்குச் சரியான ஊட்டச்சத்து உணவு உட்கொள்வதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தியது.

***

(Release ID: 2172686)

SS/SE/SH


(Release ID: 2172857) Visitor Counter : 11
Read this release in: English , Urdu , Hindi , Bengali-TR