வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
ஐரோப்பிய தடையற்ற வர்த்தக ஒப்பந்த நாடுகளுடனான ஒப்பந்தம் 2025 அக்டோபர் 1 முதல் அமலுக்கு வருகிறது- மத்திய அமைச்சர் திரு பியூஷ் கோயல்
Posted On:
29 SEP 2025 3:45PM by PIB Chennai
ஐரோப்பிய தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் நாடுகளுடன் (ஐஸ்லாந்து, லிக்டன்ஸ்டீன், நார்வே, ஸ்விட்சர்லாந்து) 2024 மார்ச் மாதத்தில் இறுதி செய்யப்பட்ட தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் 2025 அக்டோபர் 1 முதல் அமலுக்கு வரும் என்று மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
உத்திரப்பிரதேச சர்வதேச வர்த்தக கண்காட்சியின் நிறைவுநாள் நிகழ்ச்சியில் இன்று உரையாற்றிய அவர், வளர்ச்சியடைந்த நாடுகள் இந்தியாவுடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட ஆர்வமுடன் உள்ளதாக கூறினார்.
ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து நாடுகளுடனான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் ஏற்கனவே இறுதி செய்யப்பட்டு உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு 700 பில்லியன் அமெரிக்க டாலரை எட்டியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன், நியூசிலாந்து, ஓமன், பெரு, சிலி ஆகிய நாடுகளுடனும் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான விவாதங்கள் நடைபெற்று வருவதாக தெரிவித்த அவர், கத்தார், பஹ்ரைன் ஆகிய நாடுகள் தங்கள் விருப்பத்தை தெரிவித்துள்ளதாகவும் கூறினார்.
செப்டம்பர் 22 அன்று அமல்படுத்தப்பட்ட சரக்கு மற்றும் சேவை வரி சீர்திருத்தங்களின் தாக்கம் பல ஆண்டுகளுக்கு உணரப்படும் என்று திரு பியூஷ் கோயல் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2172704
***
SS/IR/LDN/RJ
(Release ID: 2172765)
Visitor Counter : 22