உணவுப் பதப்படுத்துதல் தொழிற்சாலைகள் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

உலக உணவு இந்தியா மாநாட்டில் ரூ 1.02 லட்சம் கோடி மதிப்புள்ள புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து

Posted On: 28 SEP 2025 4:00PM by PIB Chennai

மத்திய உணவு பதப்படுத்தும் தொழில்கள் அமைச்சகத்தால்  ஏற்பாடு செய்யப்பட்ட உலக உணவு இந்தியா மாநாடு பெருமளவிலான  முதலீட்டு உறுதிமொழிகளுடன்  நிறைவடைந்தது. நான்கு நாள் மாநாட்டின்போது,  26 முன்னணி உள்நாட்டு மற்றும் உலகளாவிய நிறுவனங்கள் மொத்தம் ரூ 1,02,046.89 கோடி மதிப்புள்ள புரிந்துணர்வு ஒப்பந்தங்களில்  கையெழுத்திட்டன. இது இந்தியாவின் உணவு பதப்படுத்தும் துறையில் மிகப்பெரிய முதலீட்டு அறிவிப்புகளில் ஒன்றாகும். இந்த புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் 64,000-க்கும் மேற்பட்ட மக்களுக்கு நேரடி வேலைவாய்ப்பை உருவாக்கும் என்றும், 10 லட்சத்திற்கும் மேற்பட்ட தனிநபர்களுக்கு மறைமுக வாய்ப்புகளை உருவாக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது, இது இந்தியாவை உணவு பதப்படுத்துதலுக்கான உலகளாவிய மையமாக நிலைநிறுத்துவதற்கான அரசின் தொலைநோக்கு பார்வையை வலுப்படுத்துகிறது.

இந்தக் கூட்டாண்மைகளின் குறிப்பிடத்தக்க சிறப்பம்சமாக, தமிழ்நாடு, குஜராத், மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், பஞ்சாப், பீகார், கர்நாடகாஆந்திரா, தெலுங்கானா, மத்தியப் பிரதேசம், ஒடிசா, ராஜஸ்தான், மேற்கு வங்காளம், அசாம், சத்தீஸ்கர், உத்தரகண்ட், ஜம்மு & காஷ்மீர் மற்றும் வடகிழக்கு பிராந்தியம் உள்ளிட்ட பல மாநிலங்களில் முதலீடுகள் செய்யப்படவுள்ளன.   இந்த முதலீடுகளின் நன்மைகள் சமமாகப் பகிரப்படுவதை  இது உறுதிசெய்கிறது. இது நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள விவசாயிகள், தொழில்முனைவோர் மற்றும் உள்ளூர் சமூகங்களுக்கு வாய்ப்புகளைத் தருகிறது.

தேசிய முதலீட்டு ஊக்குவிப்பு  நிறுவனமான  இன்வெஸ்ட் இந்தியா, இந்த புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட உணவு பதப்படுத்தும் தொழில்கள் அமைச்சகத்திற்கு உதவியது.

இந்த மாநாடு, சாதனை முதலீட்டு உறுதிமொழிகளை ஈர்த்தது மட்டுமல்லாமல், உணவு பதப்படுத்துதலுக்கான நம்பகமான உலகளாவிய இடமாக இந்தியாவின் நிலையை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. இது நிலையான வளர்ச்சி, புதுமை மற்றும் சர்வதேச ஒத்துழைப்புக்கு வலுவான அடித்தளத்தை அமைத்துள்ளது. இது உலகளாவிய உணவு அமைப்புகளின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் இந்தியாவின் தலைமையை மேலும் வலுப்படுத்துகிறது. இன்வெஸ்ட் இந்தியாவுடன் இணைந்து உணவு பதப்படுத்தும் தொழில்கள் அமைச்சகம், இந்த முதலீடுகளை எளிதாக்குவதற்கு தொழில்துறை பங்குதாரர்களுடன் தொடர்ந்து நெருக்கமாகப் பணியாற்றும்.

****

Release ID:( 2172417)

SS/PKV/SG

 

 


(Release ID: 2172483) Visitor Counter : 24