உணவுப் பதப்படுத்துதல் தொழிற்சாலைகள் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

உலக உணவு இந்தியா மாநாட்டின் 3 ஆம் நாளில் முக்கிய அமர்வுகள், தொழில்நுட்ப பரிமாற்றங்கள், புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து ஆகியவை இடம்பெற்றன

प्रविष्टि तिथि: 28 SEP 2025 11:44AM by PIB Chennai

உலக உணவு இந்தியா 2025 மாநாட்டின் 3 ஆம் நாளில்,  தொழில்நுட்ப அமர்வுகள், சர்வதேச ஒத்துழைப்புகள், அறிவு பரிமாற்றங்கள் ஆகியவை நடைபெற்றன. இது உணவு பதப்படுத்துதல் மற்றும் புதுமைக்கான உலகளாவிய மையமாக இந்தியாவின் பங்கை மேலும் வலுப்படுத்தியது. நிகழ்வின் முதல் இரண்டு நாட்களில், ஒட்டுமொத்தமாக 35,784 பேர் கலந்து கொண்டனர்.தமிழ்நாடு, ஆந்திரா, மகாராஷ்டிரா, ஒடிசா ஆகிய மாநிலங்கள் தங்கள் பலத்தை வெளிப்படுத்தும் அமர்வுகளை நடத்தின. மீன்வளத் துறை "மீனவர்களின் செழிப்புக்கான மீன் தொழில்நுட்பம்: பதப்படுத்துதல் மற்றும் மதிப்பு கூட்டலில் புதுமைகள்" என்ற தலைப்பில் ஒரு அமர்வை ஏற்பாடு செய்தது. உலகளாவிய கூட்டாண்மைகளை வளர்ப்பது என்ற உச்சிமாநாட்டின் தொலைநோக்குப் பார்வைக்கு இணங்க, நியூசிலாந்து, ஜிம்பாப்வே மற்றும் உகாண்டாவைச் சேர்ந்த சகாக்களுடன் முக்கிய  சந்திப்புகள் நடத்தப்பட்டன. இது விவசாயம் மற்றும் உணவு பதப்படுத்துதலில் மேம்பட்ட ஒத்துழைப்புக்கு வழி வகுத்தது.உலக உணவு இந்தியா மாநாடு, உலகளாவிய கூட்டாண்மைகளை வலுப்படுத்தும் அதே வேளையில், இந்தியாவின் உணவுப் பொருளாதாரத்தின் மாற்றத்தை ஊக்குவிக்கும் முதலீட்டிற்கான ஒரு ஊக்கியாகத் தொடர்கிறது.

****

Release ID:( 2172372)

SS/PKV/SG

 


(रिलीज़ आईडी: 2172467) आगंतुक पटल : 19
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Gujarati