PIB Headquarters
azadi ka amrit mahotsav

வளர்ச்சியடைந்த பாரதத்திற்காக வளரிளம் பெண்களை அதிகாரப்படுத்துதல்

Posted On: 28 SEP 2025 10:47AM by PIB Chennai

கடந்த ஜூன் 24 அன்று தொடங்கப்பட்ட நவ்யா (வளரிளம் பெண்களுக்கான தொழில் பயிற்சி மூலம் விருப்பங்களை நிறைவேற்றுதல் ) முன்முயற்சி, வளர்ந்து வரும் துறைகளில் வேலைகளுக்கு இளம் பெண்களைத் தயார்ப்படுத்தும் நடவடிக்கையாகும். இது, மத்திய திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சகம், மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம்  ஆகியவற்றின் முன்னோடி கூட்டு முயற்சியாகும். அவர்களிடையே நம்பிக்கை, வேலைவாய்ப்பு மற்றும் தொழில்முனைவோர் மனப்பான்மையை வளர்ப்பதே இதன் நோக்கமாகும். உத்தரப்பிரதேசத்தின் சோன்பத்ராவில் தொடங்கப்பட்ட இந்த முயற்சி, குறைந்தபட்சம் பத்தாம் வகுப்பு தகுதியுடன் 1618 வயதுடைய பெண்களுக்கானது. இது குறிப்பாக பின்தங்கிய மற்றும் பழங்குடிப் பகுதிகளைச் சேர்ந்த பெண்களை உள்ளடக்கியதாகும்.

டிஜிட்டல் மார்க்கெட்டிங், சைபர் பாதுகாப்பு, செயற்கை நுண்ணறிவால் இயக்கப்படும் சேவைகள், கிராஃபிக் வடிவமைப்பு, ட்ரோன் அசெம்பிளி, தொழில்முறை ஒப்பனை கலைஞர், சிசிடிவி மற்றும் சோலார் தகடுகள் நிறுவல் போன்ற பாரம்பரியமற்ற மற்றும் வளர்ந்து வரும் வேலைகளில் தேவை சார்ந்த பயிற்சியை வழங்குவதற்காக, பிரதமரின் திறன் மேம்பாட்டு திட்டம், பிரதமரின்  விஸ்வகர்மா போன்ற முதன்மைத் திட்டங்களிலிருந்து வளங்களை இது ஒருங்கிணைக்கிறது. கூடுதலாக, இந்த முயற்சி கல்விக்கும் வாழ்வாதாரத்திற்கும் இடையிலான இடைவெளியைக் குறைக்கவும், சுகாதாரம், ஊட்டச்சத்து, நிதி அறிவு மற்றும் வாழ்க்கைத் திறன்களை வழங்கி, சுயதொழில், பயிற்சிகள் மற்றும் பயிற்சிக்கான வாய்ப்புகளை உருவாக்கவும் முயல்கிறது.

 

  பாரம்பரிய மற்றும் பாரம்பரியமற்ற துறைகளுடன் இணைந்த தேவை சார்ந்த தொழில் பயிற்சியை வழங்குதல்: நவ்யா, தொழில்நுட்பம், சுகாதாரம் மற்றும் கைவினைப்பொருட்கள் போன்ற துறைகளில் தனிப்பயனாக்கப்பட்ட பயிற்சியை வழங்குகிறது. பாரம்பரிய திறன்களை செயற்கை நுண்ணறிவு  மற்றும் டிஜிட்டல் மார்க்கெட்டிங் போன்ற நவீன உத்திகளுடன்  கலக்கிறது. தற்போதைய தொழில்துறை கோரிக்கைகளை பூர்த்தி செய்யும் வகையிலும், வேலைவாய்ப்பை உறுதி செய்யும் வகையிலும் பாடத்திட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2172356

*****

SS/PKV/SG


(Release ID: 2172448) Visitor Counter : 8
Read this release in: English , Urdu , Hindi