PIB Headquarters
ஜிஎஸ்டி குறைப்பு மத்தியப் பிரதேசத்தில் வளர்ச்சி மற்றும் வாழ்வாதாரத்தை ஊக்குவித்தல்
Posted On:
28 SEP 2025 10:59AM by PIB Chennai
சமீபத்திய ஜிஎஸ்டி விகித குறைப்பு நடவடிக்கை பல்வேறு துறைகளில் செலவுகளைக் குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது வீடுகளுக்கு அத்தியாவசியப் பொருட்களை மிகவும் மலிவு விலையில் வழங்கும். உற்பத்தியாளர்களிடையே போட்டித்தன்மையை மேம்படுத்தும்.
புவிசார் குறியீடு கொண்ட சிற்றுண்டிகள் மற்றும் புடவைகள் முதல் பழங்குடி கைவினைப்பொருட்கள், கல் வேலைப்பாடு மற்றும் சிமெண்ட் வரை வளமான பன்முகத்தன்மைக்கு பெயர் பெற்ற மாநிலம் மத்தியப் பிரதேசம். இப்போது பரந்த அளவிலான பொருட்களுக்கான குறைந்த வரி விகிதங்களால் ஆதாயமடைய உள்ளது. இந்தச் சீர்திருத்தங்கள் விவசாயிகள், கைவினைஞர்கள், எம்எஸ்எம்இ-க்கள் மற்றும் பெரிய தொழில்களை ஆதரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், வளர்ச்சி மற்றும் வாழ்வாதாரத்திற்கான புதிய வாய்ப்புகளைத் திறக்கும்.
உணவு பதப்படுத்துதல் மற்றும் விவசாயத்துறையில், இந்தூர் நம்கீன் சேவு, மிக்சர் ஆகியவற்றுக்கு ஜிஎஸ்டி 12% இலிருந்து 5% ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. இது அதிக உள்நாட்டு விற்பனையை ஊக்குவிப்பதுடன், ஏற்றுமதியின் போட்டித்தன்மையை மேம்படுத்தும்.
இந்தியாவின் இரண்டாவது பெரிய சோயாபீன் உற்பத்தியாளரான மத்தியப் பிரதேசம், விவசாய இயந்திரமயமாக்கலுக்கான ஒரு முக்கியமான மையமாகவும் உள்ளது. இந்தூர், போபால், தேவாஸ், குவாலியர், உஜ்ஜைன் மற்றும் விதிஷாவில் உள்ள கிளஸ்டர்கள் பெரும்பாலும் குறு, சிறு மற்றும் நடுத்தரத்தொழில் நிறுவனங்களால் இயக்கப்படுகின்றன. அவை மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் உத்தரபிரதேசம் முழுவதும் உள்ள விவசாயிகளுக்குப் பயன்படும் விதை துளையிடும் இயந்திரங்கள், கதிரடிக்கும் இயந்திரங்கள், அறுவடை இயந்திரங்கள் மற்றும் நீர்ப்பாசன பம்புகளை உற்பத்தி செய்கின்றன.
பழங்குடி மற்றும் நாட்டுப்புற கைவினைப்பொருட்கள், கோண்ட் ஓவியங்கள் ஆகியவற்றின் மீதான ஜிஎஸ்டி 12% இலிருந்து 5% ஆகக் குறைக்கப்பட்டதால், கலைப்படைப்புகள் சுமார் 6% மலிவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மரத்தாலான லேக் பொம்மைகளுக்கும் ஜிஎஸ்டி 12% இலிருந்து 5% ஆகக் குறைக்கப்பட்டதால், விலைகள் சுமார் 6% குறைகின்றன, பிளாஸ்டிக் மாற்றீடுகளுக்கு எதிரான மலிவுத்தன்மையை அதிகரிக்கின்றன, திருவிழாக்கள் மற்றும் கண்காட்சிகளின் போது விற்பனையை வலுப்படுத்துகின்றன, மேலும் ஜப்பான் மற்றும் ஐரோப்பா போன்ற ஏற்றுமதி சந்தைகளில் வாய்ப்புகளை மேம்படுத்துகின்றன.
டெரகோட்டா மற்றும் களிமண் கைவினைப்பொருட்களுக்கும் ஜிஎஸ்டி 12% இலிருந்து 5% ஆகக் குறைக்கப்பட்டதால், தயாரிப்புகள் சுமார் 6% மலிவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மத்தியப் பிரதேசம் இந்தியாவின் மிகப்பெரிய சிமெண்ட் உற்பத்தியாளராக உள்ளது. சட்னா, கட்னி, டாமோ மற்றும் ரேவா ஆகியவை முக்கிய மையங்களாக உள்ளன. இந்தத் துறை சுமார் 50,000 நேரடி வேலைகளையும், சுரங்கம், போக்குவரத்து மற்றும் ஒப்பந்தங்களில் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட மறைமுக வேலைகளையும் வழங்குகிறது. இந்தியாவின் மொத்த சிமெண்ட் உற்பத்தியில் சட்னா மாவட்டம் மட்டும் கிட்டத்தட்ட 10% பங்களிக்கிறது, இது இந்தத் துறையில் மாநிலத்தின் ஆதிக்கத்தை நிலைநிறுத்துகிறது. ஜிஎஸ்டி 28% லிருந்து 18% ஆகக் குறைக்கப்பட்டதால், 50 கிலோ சிமெண்ட் பையின் விலை ரூ 25–30 குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது வீட்டுவசதி மற்றும் உள்கட்டமைப்பு திட்டங்களில் தேவையை அதிகரிக்கும் அதே வேளையில் உள்ளூர் உற்பத்தியாளர்களின் போட்டித்தன்மையையும் மேம்படுத்தும்.
வீட்டு சிற்றுண்டிகள் மற்றும் புடவைகள் முதல் பழங்குடி கைவினைப்பொருட்கள், சிமெண்ட், மணற்கல் மற்றும் பாதணிகள் வரை பரந்த அளவில் மத்தியப் பிரதேசத்திற்கு ஜிஎஸ்டி குறைப்பு பயனளிக்கும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2172363
*****
SS/PKV/SG
(Release ID: 2172436)
Visitor Counter : 8