புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கம் அமைச்சகம்
இந்தியப் புள்ளியல் கழக மசோதா, 2025 (வரைவு): கருத்துக்கள் வரவேற்பு
प्रविष्टि तिथि:
27 SEP 2025 12:27PM by PIB Chennai
மத்தியப் புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம், இந்தியப் புள்ளியியல் கழக மசோதா, 2025-ன் வரைவைப் பொதுமக்களின் கருத்துக்கேட்பிற்காக வெளியிட்டுள்ளது. முன்-சட்டமியற்றும் கலந்தாய்வு செயல்முறையின் ஒரு பகுதியாக அனைத்து பங்குதாரர்கள் மற்றும் பொதுமக்களிடமிருந்து கருத்துகளும் ஆலோசனைகளும் வரவேற்கப்படுகின்றன.
இந்தியப் புள்ளியியல் கழகம் டிசம்பர் 1931-ல் நிறுவப்பட்டது. அன்று முதல், இது இந்தியாவின் மிகவும் மதிப்புமிக்கக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களில் ஒன்றாக வளர்ந்துள்ளது. 2020-ல் டாக்டர் ஆர்.ஏ. மஷேல்கர் தலைமையிலான ஆய்வுக் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில், முன்மொழியப்பட்ட வரைவு மசோதாவானது, பயனுள்ள நிர்வாகம், தன்னாட்சி மற்றும் பொறுப்புக்கூறல் ஆகிய வழிகாட்டுதல் நெறிமுறைகளின் மீது கட்டமைக்கப்பட்டுள்ளது.
முன்மொழியப்பட்ட சீர்திருத்தங்கள், 21 ஆம் நூற்றாண்டில் இந்தியப் புள்ளியல் கழகத்தின் முழுத் திறனையும் வெளிக்கொணர்வதை நோக்கமாகக் கொண்டுள்ளன.
வரைவு மசோதா மற்றும் கருத்துகளை அனுப்புவதற்கான படிவம் ஆகியவை அமைச்சகத்தின் இணையதளத்தில் (https://new.mospi.gov.in) கிடைக்கின்றன. ஆலோசனைகளை capisi-mospi[at]gov[dot]in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு 24 அக்டோபர் 2025-க்குள் அனுப்பலாம்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2172078
***
SS/ EA/RJ
(रिलीज़ आईडी: 2172256)
आगंतुक पटल : 51