ஆயுஷ்
ஆயுர்வேத பயிற்சி அங்கீகார வாரியத்தின் முன்முயற்சிகள் குறித்த ஆய்வு கூட்டம்
Posted On:
26 SEP 2025 12:23PM by PIB Chennai
பாடத்திட்ட அங்கீகாரம் மற்றும் தொழில்முறை அங்கீகாரம் மூலம் ஆயுர் வேதத்தை உலக அளவில் விரிவுப்படுத்த மேற்கொள்ளும் முயற்சிகளின் பகுதியாக ஆயுர்வேத பயிற்சி அங்கீகார வாரியத்தின் முன்முயற்சிகள் குறித்த உயர்நிலை ஆய்வு கூட்டத்தை மத்திய ஆயுஷ் அமைச்சகம் நடத்தியது. இந்தக் கூட்டத்திற்கு மத்திய ஆயுஷ் அமைச்சக இணையமைச்சர் (தனிப்பொறுப்பு), திரு பிரதாப்ராவ் ஜாதவ் தலைமை தாங்கினார். இத்துறையின் செயலாளர் வைத்திய ராஜேஷ் கொட்டேச்சா உள்ளிட்டோர் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர்.
இந்திய மருத்துவ முறைகளுக்கான தேசிய ஆணையச் சட்டம் 2020-க்கு அப்பாற்பட்ட ஆயுர்வேத பாடமுறைகளுக்கு அங்கீகாரம் அளிப்பதில் இந்த வாரியத்தின் பங்களிப்பு மற்றும் இதனால் அண்மையில் அறிமுகம் செய்யப்பட்ட ஆயுர்வேத தொழில் முறைகளில் பயிற்சி பெறும் வெளிநாட்டினருக்கு அங்கீகாரம் அளிக்கும் திட்டம் ஆகியவை பற்றி இந்தக் கூட்டத்தில் டாக்டர் வந்தனா சிரோஹா எடுத்துரைத்தார்.
இந்தியாவில் உள்ள 24 கல்வி நிறுவனங்களில் 99 பாட வகுப்புகள் 2 வெளிநாடுகளில் 14 சர்வதேச பாட வகுப்புகள் உட்பட இதுவரை 113 ஆயுர்வேத பயிற்சி வகுப்புகள் இந்த வாரியத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. இது உலக அளவில் ஆயுர்வேத கல்வியை தரப்படுத்தவும் நம்பகத்தன்மையை உருவாக்கவும் பங்களிப்பு செய்கிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2171589
***
SS/SMB/SG/SH
(Release ID: 2171942)
Visitor Counter : 8