நிலக்கரி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

சிறப்பு இயக்கம் 5.0-ல் பங்கேற்க நிலக்கரி அமைச்சகம் தயாராகிறது

Posted On: 24 SEP 2025 1:34PM by PIB Chennai

அரசு அலுவலகங்களில் தூய்மைப் பணிகளை மேற்கொள்ளவும், நிலுவைப் பணிகளை நிறைவு செய்வதற்குமான சிறப்பு இயக்கம் 5.0-ல்  பங்கேற்பதற்கு நிலக்கரி அமைச்சகம் முழுவீச்சில் தயாராகிறது. இதற்கான தயார் நிலை குறித்து விவாதிப்பதற்காக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பங்கேற்ற கூட்டம் 26.08.2025, 04.09.2025, 19.09.2025 ஆகிய 3 நாட்கள் நடைபெற்றது.

நிலக்கரி அமைச்சக அதிகாரிகள் 18.09.2025 அன்று லோக் நாயக் பவனில் உள்ள ஆவண அறையை ஆய்வு செய்தனர். அப்போது காலாவதியான கோப்புகள் குறித்து கண்டறியப்பட்டு அதை அகற்றி அலுவலகத்திற்கான போதிய இடவசதிகளை ஏற்படுத்துவது  தொடர்பாக விவாதித்தனர்.

சிறப்பு இயக்கம் 5.0-வில் மேற்கொள்வதற்கான பணிகள் குறித்து நிலக்கரி அமைச்சகம் 2025 செப்டம்பர் 24 வரை எடுத்த நடவடிக்கைகள் மூலம் 1,165 இடங்கள் தூய்மைப்படுத்தப்பட வேண்டியது என்று கண்டறியப்பட்டுள்ளது. 7,091 மெட்ரிக் டன் அளவிலான பழையப் பொருட்கள் அகற்றப்பட வேண்டும் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 1,10,026 நேரடி கோப்புகளையும் 28,211 மின்னணு கோப்புகளையும் ஆய்வு செய்ய வேண்டும் என்று தெரியவந்துள்ளது. 2025 செப்டம்பர் 30 வரை இந்த தயார் நிலை பணிகள் நடைபெறவுள்ளதால், தூய்மைப்படுத்த வேண்டிய இடங்கள், ஆய்வு செய்யப்பட வேண்டிய கோப்புகள் உள்ளிட்டவை குறித்த எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2170517 

***

SS/IR/KPG/SH


(Release ID: 2170862) Visitor Counter : 7
Read this release in: English , Urdu , Hindi , Malayalam