இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 2026-ல் தனிநபர்கள் மற்றும் அணிகள் பங்கேற்பதற்கான தேர்வு அளவுகோல்கள் வெளியிடப்பட்டுள்ளன

Posted On: 24 SEP 2025 12:02PM by PIB Chennai

ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 2026 மற்றும் பிற விளையாட்டு நிகழ்வுகளில் தனிநபர்கள், அணிகள் பங்கேற்பதற்கான தேர்வு அளவுகோல்களை மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்  வெளியிட்டுள்ளது. பதக்கம் வெல்வதற்கு அதிக வாய்ப்புள்ள விளையாட்டு வீரர்கள் மட்டுமே பலவகை விளையாட்டு போட்டிகளில் பங்கேற்பதற்கு பரிசீலிக்கப்படுவார்கள் என்பதை உறுதிசெய்வதாகவும் வெளிப்படையான சமவாய்ப்புள்ள கட்டமைப்பை இலக்காக கொண்டும் இந்த அளவுகோல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

அளவிடக்கூடிய தனிநபர் பிரிவுகளில் வரவிருக்கும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கு முன் 12 மாதங்களுக்குள் நடைபெற்ற சர்வதேச விளையாட்டு கூட்டமைப்பால் அங்கீகரிக்கப்பட்ட போட்டியில் கடந்த ஆசிய விளையாட்டு போட்டிகளில் 6-வது இடத்திற்கு சமமான அல்லது அதைவிட சிறப்பான செயல்பாட்டுடன் இருந்தால் அந்த வீரர் / வீராங்கனை இந்திய அணியில் இடம்பெறுவார். அளவீடு அல்லாத தனிநபர் பிரிவுகளுக்கும் இது பொருந்தும்.

கால்பந்து, ஹாக்கி போன்ற அணி விளையாட்டுகள் மற்றும் தொடர் ஓட்டம், இரட்டையர் மற்றும் கலப்பு இரட்டையர் போட்டிகளில் கடந்த 12 மாதங்களுக்குள் சீனியர் ஆசிய சாம்பியன் பட்டப் போட்டிகளில் 8-வது இடத்தை பெற்ற அணி அல்லது ஆசிய நாடுகளிடையே சர்வதேச தரவரிசையில் முதல் 8 இடங்களுக்குள் உள்ள அணி ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கு பெற பரிசீலிக்கப்படும்.

கூடுதல் விவரங்களுக்கு https://yas.gov.in/sites/default/files/Letter%2024.09.2025%20Selection%20Criteria%20for%20Participation%20in%20the%202026%20Asian%20Games%2C%20Para-Asian%20Games%202026%20and%20other%20multi-sports%20events.pdf  என்ற இணைய தளத்தை அணுகலாம்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2170478   

***

SS/SMB/AG/SH

 


(Release ID: 2170851) Visitor Counter : 3