உள்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

குஜராத் தலைநகர் காந்திநகரின் காலோல் நகராட்சியில் 144 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா தொடங்கி வைத்து, அடிக்கல் நாட்டினார்

Posted On: 23 SEP 2025 7:21PM by PIB Chennai

குஜராத் தலைநகர் காந்திநகரின் காலோல் நகராட்சியில் 144 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் திரு அமித் ஷா அடிக்கல் நாட்டிநிறைவடைந்த திட்டங்களைத் தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் பேசிய அவர்கடந்த ஐந்து முதல் ஆறு ஆண்டுகளில் காலோல் நகராட்சி இதுவரை இல்லாத வளர்ச்சியை அடைந்துள்ளது என்று கூறினார். 2029-ம் ஆண்டுக்குள் காலோலை மாதிரி சட்டமன்ற தொகுதியாக முன்னேற்றுவதற்கு ஊரக மற்றும் நகர்ப்புறங்களுக்கு இடையே ஒருங்கிணைப்பை ஏற்படுத்திதிட்டம் ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். இந்தப் பகுதியில் உலகத்தரம் வாய்ந்த நவீன வசதிகளுடன் 350 படுக்கைகள் கொண்ட பிரம்மாண்டமான மருத்துவமனை கட்டப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார். 2027-ம் ஆண்டு இந்த மருத்துவமனை பயன்பாட்டிற்கு வந்த பிறகுஇங்கு வசிக்கும் மக்கள் சுகாதார சேவைக்காக வேறு எங்கும் செல்ல வேண்டியிருக்காது என்றும் அவர் தெரிவித்தார்.

பொதுமக்களுக்கு மிகப்பெரிய நிவாரணம் வழங்கும் நோக்கத்துடன் உணவுப் பொருட்கள் மீதான ஜிஎஸ்டியை பூஜ்ஜியமாகவும்வேளாண் சார்ந்த பொருட்களுக்கான வரியை 50 சதவீதம் குறைத்தும் பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு அமல்படுத்தியிருப்பதை உள்துறை அமைச்சர் சுட்டிக்காட்டினார். ஸ்கூட்டர்கள்மோட்டார் சைக்கிள் கார்கள் முதலிய வாகனங்கள் மீதான வரிகளும் குறைக்கப்பட்டுள்ளன. நிலக்கரி மீதான வரி குறைந்திருப்பதால்மின்சாரக் கட்டணமும் குறையும் என்றார் அவர். நாட்டு மக்கள்குறிப்பாக தாய்மார்களும் சகோதரிகளும் உள்நாட்டு தயாரிப்புகளை மட்டுமே பயன்படுத்த உறுதியேற்க வேண்டும் என்று பிரதமர் திரு மோடி எதிர்பார்ப்பதாக அமைச்சர் குறிப்பிட்டார். உள்நாட்டு தயாரிப்புகளை வாங்குவதனால்  நம் நாட்டில் அபரிமிதமான வர்த்தக வாய்ப்புகள் பெருகுவதுடன் இந்தியப் பொருளாதாரம்உலக அளவில் மூன்றாவது இடத்தைப் பிடிக்கும் என்று அவர் கூறினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: 

 https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2170278

 (Release ID: 2170278)

***

AD/BR/SH


(Release ID: 2170407)