பாதுகாப்பு அமைச்சகம்
புதுதில்லியில் ஆயுதப்படை அதிகாரிகளுக்காக சிறப்பு வேலைவாய்ப்பு முகாம்- மீள்குடியேற்ற தலைமை இயக்குநரகம் ஏற்பாடு
Posted On:
23 SEP 2025 1:00PM by PIB Chennai
பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் முன்னாள் ராணுவ வீரர்கள் நலத்துறை சார்பில் ஆயுதப்படை முன்னாள் அதிகாரிகளுக்கு 2025 செப்டம்பர் 22-ம் தேதி சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் புதுதில்லியில் நடைபெற்றது. வேலை தேடும் ஓய்வுபெற்ற- ஓய்வுபெறவுள்ள அதிகாரிகளையும், பெரிய தொழில் நிறுவனங்களை ஒன்றிணைக்கும் வகையிலும் இந்த வேலைவாய்ப்பு முகாமிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த முகாமில் 26 நிறுவனங்கள் பங்கேற்று, நூற்றுக்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகளை வழங்கின. வேலை தேடும் 300-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் இதில் கலந்துகொண்டனர்.
அதிகாரிகள் தங்கள் சேவை காலத்தின் போது பெற்ற தொழில்நுட்ப மற்றும் நிர்வாக திறமையை வெளிப்படுத்தும் ஒரு தளமாக இந்த நிகழ்வு அமைந்தது. இந்த முகாமில் தேர்வு செய்யப்பட்ட அதிகாரிகள் நேர்காணல் செய்யப்பட்டு பல்வேறு பிரிவுகளின் கீழ் மேற்பார்வை, தொழில்நுட்பம் மற்றும் செயல்திட்ட நிர்வாகம் உள்ளிட்ட பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்படுவர்.
இந்த நடவடிக்கை அனுபவம் வாய்ந்த திறமையான அதிகாரிகளை தேர்வு செய்யும் தொழில் நிறுவனங்கள் பயனடைய உதவுகிறது. முன்னாள் படை வீரர்களுக்கு தொழில் வாய்ப்புகளை எளிதாக்கும் மீள்குடியேற்ற தலைமை இயக்குநரகத்தின் தொடர்ச்சியான முயற்சிகளின் ஒருபகுதியாக இந்த வேலைவாய்ப்பு முகாம் அமைந்துள்ளது.
***
(Release ID:2169999)
SS/GK/AG/SH
(Release ID: 2170380)
Visitor Counter : 4