ஆயுஷ்
முழுமையான சுகாதாரப் பராமரிப்பை உறுதிசெய்யும் வகையில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் இந்தியாவின் மருத்துவ கட்டமைப்பை வலுப்படுத்தும் வகையில் உள்ளது
Posted On:
22 SEP 2025 11:49AM by PIB Chennai
முழுமையான சுகாதாரப் பராமரிப்பை உறுதி செய்யும் வகையில் ஆயுர்வேத சிகிச்சை முறையின் அவசியத்தை எடுத்துரைக்கும் வகையில், ஆயுர்வேத தினத்தைக் கொண்டாட மத்திய ஆயுஷ் அமைச்சகம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக கோவா தலைநகர் பனாஜியில் இன்று பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் மத்திய ஆயுஷ் அமைச்சகம் மேற்கொண்டுவரும் முயற்சிகள் குறித்தும், ஆயுர்வேத தினத்தை கொண்டாடுவது குறித்தும் விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.
செய்தியாளர்களிடம் பேசிய அகில இந்திய ஆயுர்வேத மருத்துவ நிறுவனத்தின் இயக்குனர் திரு பிரதீப்குமார் பிரஜாபதி, மக்களுக்கான ஆயுர்வேத மருத்துவம் மற்றும் பூமிக்கான ஆயுர்வேத மருத்துவம் என்ற கருப்பொருளுடன் இந்த ஆண்டுக்கான ஆயுர்வேத தினம் கொண்டாடப்பட உள்ளதாக கூறினார். தனிநபர் சுகாதாரம், சர்வதேச நல்வாழ்வு, சூழலுக்கு உகந்த வாழ்வியல் முறை மற்றும் நீடித்த மேம்பாடு ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு, சுகாதார வசதிகள் மேம்படுத்தப்பட வேண்டியதன் அவசியத்தை திரு பிரதீப்குமார் பிரஜாபதி வலியுறுத்தினார்.
***
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2169442
SS/SV/LDN/KR
(Release ID: 2170002)
Visitor Counter : 7