தேசிய மனித உரிமைகள் ஆணையம்
உலகளாவிய தெற்கு நாடுகளின் மூத்த மனித உரிமை செயல்பாட்டாளர்களுக்கான திறன் மேம்பாட்டுத் திட்டம் - வெளியுறவு அமைச்சகத்துடன் இணைந்து தேசிய மனித உரிமைகள் ஆணையம் நடத்துகிறது
Posted On:
21 SEP 2025 3:30PM by PIB Chennai
தேசிய மனித உரிமைகள் ஆணையம், வெளியுறவு அமைச்சகத்துடன் இணைந்து, உலகளாவிய தெற்கு நாடுகளின் தேசிய மனித உரிமை நிறுவனங்களின் மூத்த செயல்பாட்டாளர்களுக்கான ஆறு நாள் நிர்வாக திறன் மேம்பாட்டு திட்டத்தை 2025 செப்டம்பர் 22 முதல் 27 வரை புதுதில்லியில் நடத்துகிறது. இந்த திட்டம் உலகளாவிய தெற்கு நாடுகளின் தேசிய மனித உரிமை நிறுவனங்களின் திறன்களை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இது உலகளாவிய மனித உரிமைகள் குறித்த உரையாடல், தென் பகுதி நாடுகளுக்கு இடையே ஒத்துழைப்பு, உரிமைகள் அடிப்படையிலான கூட்டு முன்னேற்றம் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டது.
மொரிஷியஸ், ஜோர்டான், ஜார்ஜியா, பிலிப்பைன்ஸ், கத்தார், ஃபிஜி, உஸ்பெகிஸ்தான், பொலிவியா, நைஜீரியா, மாலி, மொராக்கோ, பராகுவே ஆகிய நாடுகளைச் சேர்ந்த மூத்த நிர்வாகிகள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வார்கள். இந்த நிகழ்ச்சியை தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவர் திரு வி. ராமசுப்பிரமணியன் தொடங்கி வைப்பார்.
மனித உரிமைகள் வலுவாக மதிக்கப்பட்டு பாதுகாக்கப்படும் உலகத்தை உருவாக்குதற்கான இந்தியாவின் நீடித்த அர்ப்பணிப்புக்கு இந்த நிகழ்ச்சி ஒரு சான்றாக அமைந்துள்ளது. இது உலகளாவிய தெற்கு நாடுகளிடையே மனித உரிமைகள் குறித்த உரையாடல், கற்றல், ஒத்துழைப்பு ஆகியவற்றுக்கான ஒரு துடிப்பான தளமாக அமையும்.
***
(Release ID: 2169234)
AD/PLM/RJ
(Release ID: 2169266)
Visitor Counter : 2