பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
எஸ்எஸ்சி-யின் கருத்துப் பதிவு தளம் வலுவான வரவேற்பைப் பெற்றுள்ளது
Posted On:
20 SEP 2025 2:11PM by PIB Chennai
மத்திய பணியாளர் தேர்வாணையமான எஸ்எஸ்சி சார்பில் புதிதாகத் தொடங்கப்பட்ட பின்னூட்டத் தகவல் அளிக்கும் இணையதளம், ஒருங்கிணைந்த பட்டதாரி நிலைத் தேர்வு (CGLE-சிஜிஎல்இ) 2025-க்குத் தேர்வான நபர்களிடமிருந்து ஊக்கமளிக்கும் வரவேற்பைப் பெற்றுள்ளதாகவும், இது தொடங்கப்பட்ட ஒரு வாரத்திற்குள் கிட்டத்தட்ட 10,000 பேர் தங்கள் தேர்வு அனுபவங்களைச் சமர்ப்பித்துள்ளதாகவும் பணியாளர் தேர்வு ஆணையம் (SSC) தெரிவித்துள்ளது.
கணினி அடிப்படையிலான தேர்வின் போது தொழில்நுட்ப இடையூறுகள் ஏற்பட்டதாகக் கூறப்படும் சம்பவங்களை சுமார் 2,000 தேர்வர்கள் பதிவு செய்துள்ளதாக எஸ்எஸ்சி அதிகாரிகள் தெரிவித்தனர். ஒவ்வொரு புகாரையும் ஆணையம் அதன் பிராந்திய அலுவலகங்கள் மூலம் கவனமாக ஆய்வு செய்து வருகிறது. இடையூறுகள், பாதிப்புகள் உண்மையானவை எனக் கண்டறியப்பட்டால், பாதிக்கப்பட்ட நபர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படும். மறு தேர்வுகள் 2025 செப்டம்பர் 26 அன்று அல்லது அதற்கு முன் நடத்தப்படும் என்று ஒரு அதிகாரி கூறினார்.
தேர்வுகளை நடத்துவதில் வெளிப்படைத்தன்மைக்கு ஆணையம் தொடர்ந்து உறுதிபூண்டுள்ளதாக ஆணையம் கூறியுள்ளது. இதுவரை, நாடு முழுவதும் 7.16 லட்சம் தேர்வர்கள் தேர்வை வெற்றிகரமாக எழுதியுள்ளனர்.
சிஜிஎல்இ (CGLE) என்பது இந்தியாவின் மிகப்பெரிய ஆட்சேர்ப்புத் தேர்வுகளில் ஒன்றாகும். இதில் மத்திய அரசுப் பணிகளைத் தேடும் லட்சக்கணக்கான ஆர்வலர்கள் பங்கேற்கின்றனர். இந்தப் பின்னூட்ட தளம், செயல்முறையை மிகவும் எளிதாகவும், தேர்வர்களை மையமாகக் கொண்டதாகவும் மாற்றுவதற்கான ஒரு படியாகக் கருதப்படுகிறது. தேர்வு முறையின் நம்பகத் தன்மையைப் பராமரிக்கும் அதே வேளையில் பிரச்சினைகள் உடனடியாகத் தீர்க்கப்படுவதை இது உறுதி செய்யும்.
***
(Release ID: 2168881)
AD/PLM/RJ
(Release ID: 2169058)