பெண்கள் மற்றும் குழந்தை நலன் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தேசிய ஊட்டச்சத்து மாதத்தையொட்டி தெலங்கானாவின் கரீம்நகர் மாவட்டத்தில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றன

प्रविष्टि तिथि: 20 SEP 2025 4:13PM by PIB Chennai

ஊட்டச்சத்து மாத கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, தெலங்கானாவின் கரீம்நகர் மாவட்டத்தில், பள்ளி ஒன்றில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. உள்ளூரில் உள்ள பள்ளி குழந்தைகள், தாய்மார்கள், ஆண்கள் ஆகியோர் மத்தியில் ஊட்டச்சத்தையும் நல்வாழ்வையும் மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு இந்த நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன

இந்த இயக்கத்தில் மக்கள் பங்கேற்பை ஊக்குவிப்பதற்கும், ஊட்டச்சத்தின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை பரப்புவதற்கும் கட்டுரை எழுதுதல், சுவரொட்டி தயாரித்தல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. இது தவிர, ரத்த சோகை, ரத்த சர்க்கரை அளவு பரிசோதனை, உடல் பருமன் பரிசோதனைகள் போன்றவை அடங்கிய விரிவான சுகாதார முகாம் நடத்தப்பட்டது.

இந்த நடவடிக்கைகள் நல்ல வரவேற்பைப் பெற்றன. மேலும் ஊட்டச்சத்து மாதம் கடைப்பிடிக்கப்படுவதன் நோக்கங்கள் குறித்து சமூகத்தின் புரிதலை வலுப்படுத்த இவை பங்களித்தன.

***

(Release ID: 2168925)

AD/PLM/RJ


(रिलीज़ आईडी: 2169028) आगंतुक पटल : 18
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी