புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கம் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

நேர பயன்பாட்டு ஆய்வு குறித்த தரவு பயனர்கள் மாநாடு திருவனந்தபுரத்தில் நடைபெறவுள்ளது

Posted On: 20 SEP 2025 12:06PM by PIB Chennai

மத்திய அரசின் புள்ளியியல், திட்ட அமலாக்க அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தேசிய புள்ளியியல் அலுவலகம், திருவனந்தபுரத்தில் உள்ள மேம்பாட்டு ஆய்வுகள் மையத்துடன் இணைந்து, 2025 செப்டம்பர் 22 அன்று திருவனந்தபுரத்தில் தரவு பயனர் நேரப் பயன்பாட்டு ஆய்வு (TUS -டியூஎஸ்) மாநாட்டை நடத்தவுள்ளது. இந்த மாநாடு தரவுகளை வழங்குபவர்களுக்கும் பயனர்களுக்கும் இடையிலான உரையாடலை வலுப்படுத்தும். சமூக-பொருளாதார கொள்கை வகுப்பிற்கு டியூஎஸ் முக்கியத்துவம் வாய்ந்தது. கொள்கைகளை வகுக்கும்போது தரவுப் பயன்பாடுகள் பற்றிய ஆழமான நுண்ணறிவுகள் அவசியம்.

நேர பயன்பாட்டு ஆய்வானது (TUS), தனிநபர்கள் தங்கள் நேரத்தை எவ்வாறு ஒதுக்குகிறார்கள் என்பது குறித்த மதிப்புமிக்க தகவல்களை வழங்கும். தற்போது அந்த டியூஎஸ், 2024, 2019-ம் ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட முந்தைய ஆய்வை அடிப்படையாகக் கொண்டு செய்யப்படுகிறது.

மாநாட்டின் தொடக்க அமர்வில், புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சக செயலாளர் திரு சௌரப் கார்க், தேசிய மாதிரி ஆய்வு மைய தலைமை இயக்குநர் திருமதி கீதா சிங் ரத்தோர் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொள்வார்கள்.

இந்த நிகழ்வில் ஆராய்ச்சியாளர்கள், பொருளாதார வல்லுநர்கள், கொள்கை வகுப்பாளர்கள், சர்வதேச அமைப்புகளின் பிரதிநிதிகள், சிவில் சமூகத்தின் பிரதிநிதிகள், கல்வித் துறையினர், ஊடகங்களின் பிரதிநிதிகள் உட்பட சுமார் 175 பங்கேற்பாளர்கள் கலந்து கொள்வார்கள்.

***

(Release ID: 2168860)

AD/PLM/RJ


(Release ID: 2168913)