நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம்
நுகர்வோர் விவகாரஙகள் துறை, தூய்மையே சேவை சிறப்பு இயக்கத்தில் தீவிரமாகப் பங்கேற்பு
Posted On:
20 SEP 2025 11:41AM by PIB Chennai
வீட்டுவசதி, நகர்ப்புற விவகார அமைச்சகம் (MoHUA), குடிநீர் மற்றும் துப்புரவுத் துறை (DDWS) ஆகியவை இணைந்து 2025 செப்டம்பர் 17 முதல் அக்டோபர் 2 வரை நடத்தும் தூய்மையே சேவை இயக்கத்தில் நுகர்வோர் விவகாரங்கள் துறை பல்வேறு முன்முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இது ஐந்து முக்கிய தூண்களைச் சுற்றி கட்டமைக்கப்பட்டுள்ளது:
* கடினமான புறக்கணிக்கப்பட்ட இடங்களை தூய்மை செய்தல்.
* பொது இடங்களை சுத்தம் செய்தல்
* தூய்மைப் பணியாளர்களின் நலனுக்கான முகாம்கள்
* சுற்றுச்சூழலுக்கு உகந்த கொண்டாட்டங்கள்
* குப்பையில் இருந்து கலைப் பொருள்கள் தயாரித்தல், தூய்மையான சாலையோர உணவு முதலியன.
இதுதவிர, நிர்வாக சீர்திருத்தங்கள் - பொது குறை தீர்க்கும் துறையால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 5-வது சிறப்பு இயக்கம், அரசு அலுவலகங்களில் நிலுவையில் உள்ள குறைகளைத் தீர்த்தல் தொடர்பான இயக்கம் 2025 அக்டோபர் 02 முதல் 31 வரை கடைப்பிடிக்கப்படும்.
ஆயத்த நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, 16.09.2025, 17.09.2025 ஆகிய தேதிகளில் ஆய்வுக் கூட்டங்கள் நடத்தப்பட்டன. இயக்கத்தின் வெற்றியை உறுதி செய்வதற்காக நுகர்வோர் விவகாரங்கள் துறை, தனது அனைத்து அலுவலகங்களுடனும் ஒருங்கிணைந்து தீவிரமாகப் பணியாற்றி வருகிறது.
***
(Release ID: 2168857)
AD/PLM/RJ
(Release ID: 2168907)