கலாசாரத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களின் நூற்றுக்கும் மேற்பட்ட பொருட்கள் பிரதமரின் பரிசு பொருட்களின் மின்னணு ஏலத்தில் இடம்பெற்றுள்ளன

Posted On: 19 SEP 2025 6:08PM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடிக்கு வழங்கப்பட்ட பரிசுப் பொருட்களின் மின்னணு ஏலம் கடந்த 17-ம் தேதி துவங்கி அக்டோபர் 2-ம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் தமிழ்நாட்டின் புகழ்பெற்ற பாரம்பரிய கலைப்பொருட்கள் மற்றும் விளையாட்டு உபகரணங்கள் முக்கிய அங்கம் வகிக்கின்றன.  தென்னிந்தியாவில்அதிகபட்சமாக தமிழ்நாட்டைச் சேர்ந்த 29 பொருட்கள் ஏலம் விடப்படுகின்றன. தமிழ்நாட்டிற்கு அடுத்தபடியாக ஆந்திர பிரதேசத்தின் 27 பொருட்களும்கர்நாடகாவைச் சேர்ந்த 22 பரிசுப் பொருட்களும்கேரளாவில் பிரசித்தி பெற்ற 15 பொருட்களும்தெலங்கானாவைச் சேர்ந்த 7 பொருட்களும் ஏலத்தில் இடம்பெற்றுள்ளன.‌

தமிழ்நாட்டைச் சேர்ந்த இந்திய பாராலிம்பிக் உயரம் தாண்டுதல் வீரரான திரு மாரியப்பன் தங்கவேலு அளித்த காலணிஉலோகத்தாலான கண்கவர் நடராஜர் சிலை உள்ளிட்ட பொருட்கள் மின்னணு ஏலத்தில் இடம்பெற்றுள்ளன.

இந்த ஆண்டு நடைபெறும் ஏழாம் பதிப்பு ஏலத்தில் நாடு முழுவதிலும் இருந்து 1300 தனித்துவம் வாய்ந்த பொருட்கள் ஏலத்திற்கு விடப்படுகின்றன. இதன் மூலம் திரட்டப்படும் தொகைகங்கை நதியை புணரமைக்கும் மத்திய அரசின் முன்னோடி முன்முயற்சியான நமாமி கங்கே திட்டத்திற்கு பயன்படுத்தப்படும். www.pmmementos.gov.in  என்ற இணையதளம் மூலம் பரிசுப் பொருட்கள் ஏலம்விடப்படுவதுகுறிப்பிடத்தக்கது.

 

***

AD/BR/SH

 
 
 

(Release ID: 2168814)
Read this release in: English , Urdu , Hindi , Kannada