சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தூய்மையே சேவை இயக்கத்தில் நீதித்துறை ஈடுபட்டுள்ளது

Posted On: 18 SEP 2025 12:52PM by PIB Chennai

தூய்மையே சேவை இயக்கத்தை 2025 செப்டம்பர் 17 முதல் அக்டோபர் 2 வரை நீதித்துறை கடைபிடிக்க உள்ளது. இந்த இயக்கத்தின் கீழ், புதுதில்லி மான்சிங் சாலையில் ஜெய்சால்மர் இல்லத்தில் உள்ள நீதித்துறையில் முழு தூய்மைப் பணிகளில் கவனம் செலுத்துதல், அறைகள், பிரிவுகள், முனையங்கள், உணவகப் பகுதி, கழிவறை உள்ளிட்ட பகுதிகளை நாள்தோறும் தூய்மைப்படுத்துதல், ஜெய்சால்மர் இல்லத்தில் முன்புற புல்வெளிப் பகுதிகளில் மரக்கன்றுகளை நடுதல், அதன் நுழைவு வாயில் மற்றும் வெளியேறும் பகுதிகளில் தூய்மைப் பணிகளை மேற்கொள்ளுதல், தூய்மைப்பணியாளர்களுக்கு அப்பணிக்கான உபகரணங்கள் மற்றும் ஊக்கத்தொகைகளை  வழங்குதல் போன்ற பணிகளை மேற்கொள்வது என நீதித்துறை பரிந்துரைத்துள்ளது.

மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகம், குடிநீர் மற்றும் துப்புரவுத்துறை ஆகியவை 25.09.2025 அன்று ஏற்பாடு செய்துள்ள ஒரு மணி நேர தூய்மைப் பணிகளில், நீதித்துறை பங்கேற்க உள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2167964

***

SS/IR/KPG/KR


(Release ID: 2168133)
Read this release in: English , Urdu , Hindi