பாதுகாப்பு அமைச்சகம்
இந்திய பாதுகாப்புத்துறை பொறியாளர்கள் 76-வது உதய தினத்தைக் கொண்டாடினார்கள்
Posted On:
18 SEP 2025 10:05AM by PIB Chennai
பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் உள்ள இந்திய பாதுகாப்புத்துறை பொறியாளர்கள் குரூப் ‘ஏ’ பிரிவினர் அதன் 76-வது உதயதினத்தை தில்லி கண்டோன்மெண்டில் உள்ள மானெக்ஷா மையத்தில் 2025 செப்டம்பர் 17 அன்று கொண்டாடினார்கள். இந்நிகழ்ச்சியில் பாதுகாப்புத்துறை செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங், முதன்மை விருந்தினராக கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், உலகத்தரம் வாய்ந்த உள்கட்டமைப்பு மூலம் தேசிய பாதுகாப்பு தயார் நிலையை வலுப்படுத்துவதில் இந்தியப் பாதுகாப்புத்துறை பொறியாளர்களின் பங்களிப்பை பாராட்டுவதாகக் குறிப்பிட்டார். தற்போதைய பாதுகாப்புச் சூழலுக்கு ஏற்படும் சவால்களை எதிர்கொள்ளும் வகையில் தயாராக இருக்க வேண்டும் என்றும் மாறிவரும் காலத்திற்கு ஏற்ப புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்தும் அவர் வலியுறுத்தினார்.
பாதுகாப்புத்துறை செயலாளரின் உரையைத் தொடர்ந்து இந்திய கலாச்சார உறவுகள் குழுமத்தினரின் கலாச்சார நிகழ்ச்சிகளும் நடன நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. இந்நிகழ்ச்சியில் பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் ராணுவ தலைமையகத்தைச் சேர்ந்த உயர் சிவில் மற்றும் ராணுவ அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்திய பாதுகாப்புத்துறை பொறியாளர்கள் சேவை 1949-ம் ஆண்டு செப்டம்பர் 17 அன்று தொடங்கப்பட்டது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2167918
----
SS/IR/KPG/KR
(Release ID: 2167958)