அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
நாட்டின் முதலாவது 240 வோல்ட் மின்சார இருசக்கர வாகன உற்பத்தி திட்டம் உள்நாட்டு மின்சார வாகன தொழில்நுட்ப திறனுக்கு வலுசேர்க்கிறது
प्रविष्टि तिथि:
17 SEP 2025 12:57PM by PIB Chennai
இந்தியாவில் மின்சார இருசக்கர வாகனங்கள் உற்பத்தியை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளுக்கு தொழில்நுட்ப மேம்பாட்டு வாரியம் மற்றும் அறிவியல் & தொழில்நுட்ப துறை தொடர்ந்து ஊக்குவித்து வருகிறது. இதன்படி, உள்நாட்டு மின்சார வாகனங்களுக்கான உற்பத்தி திறன் மற்றும் வர்த்தக மயமாக்கல் நடவடிக்கைகளை விரிவுபடுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நாட்டின் முதலாவது 240 வோல்ட் திறன் கொண்ட மின்சார இருசக்கர வாகன உற்பத்தியை சென்னையில் உள்ள தனியார் நிறுவனமான ராப்டி எனர்ஜி நிறுவனம் மேற்கொண்டுள்ளது.
உயர் மின்னழுத்த தொழில்நுட்பம் அடிப்படையிலான இந்த நவீன கண்டுபிடிப்பின் திறன் ஏற்கனவே மின்சார கார்கள் உற்பத்தியில் நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்த உயர் மின்னழுத்த மின்கலன் கட்டமைப்பு விரைவாக மின்னேற்றம் செய்யும் வகையிலும், சிறந்த திறனை வெளிப்படுத்தும் வகையிலும் தடையற்ற பயன்பாடு கொண்டதாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது இந்தியாவின் மின்சார வாகன உற்பத்திக்கான கட்டமைப்பை விரிவுபடுத்தும் வகையில் அமைந்துள்ளது.
இந்த புதிய மின்சார இருசக்கர வாகனத்தில் பயன்படுத்தப்படும் மின்கலனுக்கு இந்திய வாகன ஆராய்ச்சி சங்கம் சான்றிதழ் அளித்துள்ளது. மேலும் இந்நிறுவனத்தில் உள்ள ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு துறையின் ஆய்வுகளுக்கு அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி நிறுவனம் அங்கீகாரம் அளித்துள்ளது.
***
(Release ID: 2167498)
SS/SV/AG/KR
(रिलीज़ आईडी: 2167614)
आगंतुक पटल : 27