சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத் துறை 2024 நவம்பர் முதல் 2025 ஆகஸ்ட் வரை நடைபெற்ற பணிகள் மூலம் 35,000-க்கும் மேற்பட்ட பொதுமக்களின் குறைகளுக்கு தீர்வு கண்டது

Posted On: 16 SEP 2025 2:22PM by PIB Chennai

அரசு அலுவலகங்களில் தூய்மைப் பணியை மேற்கொள்வது மற்றும் நிலுவைப் பணிகளைக் குறைப்பது என்ற அரசின் முன்முயற்சியை ஏற்று மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகத்தின் கீழ் உள்ள சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை, மத்திய அரசு மருத்துவமனைகள், துணை அலுவலகங்கள், சார்பு அலுவலகங்கள், தன்னாட்சி அமைப்புகள், மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்கள் ஆகியவற்றுடன் இணைந்து 2021-ம் ஆண்டு முதல் சிறப்பு இயக்கங்கள் பணிகளில் பங்கேற்று வருகிறது.

2024 நவம்பர் முதல் 2025 ஆகஸ்ட் வரை நடைபெற்ற பணிகள் மூலம் 29,845 கோப்புகளை ஆய்வு செய்து 19,761 கோப்புகளை நீக்கியுள்ளது. அத்துடன் 35,435 பொதுமக்கள் குறைகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய 2,957 மேல் முறையீடுகள், நாடாளுமன்ற உறுப்பினர்களின் 255 குறிப்புகள், நாடாளுமன்றத்தின் 22 உறுதிமொழிகள் மற்றும்  மாநில அரசுகளின் 16 குறிப்புகளுக்கு தீர்வு கண்டது. மொத்தம் 1,437 தூய்மை இயக்கங்கள் மூலம் ரூ.29.96 லட்சம் மதிப்பிலான பழையப் பொருட்கள் கழிக்கப்பட்டது. 16,352 சதுர அடி விடுவிக்கப்பட்டது. இந்நிலையில், சிறப்பு இயக்கம் 5.0-க்கு தயாராவதற்கான பணிகளை செப்டம்பர் 15 முதல் செப்டம்பர் 30 வரை மேற்கொள்கிறது.


                                                                                                                     ***

SS/IR/KPG/SH


(Release ID: 2167322) Visitor Counter : 2
Read this release in: English , Hindi