வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
நிலைத்தன்மையுடன் கூடிய வளர்ச்சிக்கு மத்திய அரசு அதிக கவனம் செலுத்துகிறது- அமைச்சர் பியூஷ் கோயல்
प्रविष्टि तिथि:
15 SEP 2025 2:55PM by PIB Chennai
சமரசம் இல்லாத நிலையான வளர்ச்சிப் பாதையில் இந்தியா பயணித்து வருவதாக மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். இந்திய தர நிர்ணய அமைவனம் ஏற்பாடு செய்திருந்த சர்வதேச மின் தொழில்நுட்ப ஆணைய கண்காட்சியை தொடங்கி வைத்துப் பேசிய அவர், நிலைத்தன்மையுடன் கூடிய வளர்ச்சியை நோக்கி மத்திய அரசு அதிக கவனம் செலுத்தி வருவதாக கூறினார்.
வளர்ந்த நாடுகளிடம் இருந்து கற்றுக்காள்வதிலும், குறிப்பாக சர்வதேச அளவில் பொருளாதார வளர்ச்சிக்கு உதவிய, உயர்தர நிலைப்பாடுகள் குறித்து அறிந்துகொள்வதிலும் இந்தியா ஆர்வம் காட்டி வருவதாகவும் தெரிவித்தார். இந்த உயர்தர நிலைப்பாடுகள், இந்தியாவின் தற்சார்பு வளர்ச்சிக்கும், உலகில் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதார நாடாக மாறுவதற்கும் மையமாக உள்ளது என அவர் குறிப்பிட்டார்.
இந்தியா போன்ற வளரும் நாடுகளுக்கு சிறந்த தர நிலைகள் இன்றைய காலத்தின் தேவையாக உள்ளதாகவும், அவை தேசிய அளவிலான வளர்ச்சிக்கும் சர்வதேச அளவிலான முன்னேற்றத்திற்கும் முக்கிய பங்கு வகிப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார். உலகளவிலான தர நிலைகளை ஒருங்கிணைப்பது, தயாரிப்பு தரத்தை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல் எளிதான வர்த்தகத்திற்கு வழிவகுக்கிறது என்று அவர் கூறினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2166727
***
AD/GK/LDN/KR
(रिलीज़ आईडी: 2166804)
आगंतुक पटल : 12