ஆயுஷ்
azadi ka amrit mahotsav

கேரளாவில் இரண்டு நாள் தேசிய ஆயுஷ் இயக்கத்தின் பயிலரங்கு

Posted On: 13 SEP 2025 4:21PM by PIB Chennai

கேரளாவின் தேசிய ஆயுஷ் இயக்கம், ஆயுஷ் துறையில் தகவல் தொழில்நுட்ப தீர்வுகள் என்ற தலைப்பில் இரண்டு நாள் தேசிய பயிலரங்கை செப்டம்பர் 18,19   ஆகிய தேதிகளில் கோட்டயத்தில் நடத்துகிறது.

ஆயுஷ் துறையில் டிஜிட்டல் தீர்வுகளை வலுப்படுத்துவதற்கும், விரிவான, மையப்படுத்தப்பட்ட மற்றும் ஒன்றோடொன்று இயங்கக்கூடிய டிஜிட்டல் கட்டமைப்பை நோக்கி நகர்வதற்கும் ஒரு கூட்டுத் தளமாக இந்தப் பயிலரங்கு கருதப்படுகிறது. மக்களை மையமாகக் கொண்ட சேவை வழங்கலை மேம்படுத்துதலை இந்தக் கட்டமைப்பு நோக்கமாகக் கொண்டுள்ளது.

கேரள அரசின் சுகாதாரம் மற்றும் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் திருமதி.வீணா ஜார்ஜ் தொடக்க உரையை நிகழ்த்துவார், அதைத் தொடர்ந்து கேரள அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் (சுகாதாரம்) திரு  ராஜன் கோப்ரகடே தலைமை உரையை ஆற்றுவார்.

மத்திய  ஆயுஷ் அமைச்சகத்தின் செயலாளர் வைத்திய ராஜேஷ் கோடேச்சா சிறப்புரை ஆற்றுவார், மேலும் ஆயுஷ் அமைச்சகத்தின் இணைச் செயலாளர் திருமதி கவிதா ஜெயின் கலந்து கொண்டு உரையாற்றுவார்.

இந்தப் பயிலரங்கில் ஆயுஷ் அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த அமைச்சர்கள் மற்றும் மூத்த நிர்வாகிகள், மாநில ஆயுஷ் துறைகளின் மிஷன் இயக்குநர்கள் மற்றும் முக்கிய அதிகாரிகள், மத்திய மற்றும் மாநில/யூனியன் பிரதேச மட்டங்களில் உள்ள ஆயுஷ் தொழில்நுட்ப பிரிவுகளின் தொழில்நுட்ப பணியாளர்கள் மற்றும் டிஜிட்டல் சுகாதாரம், மின்-ஆளுமை தளங்களின் நிபுணர்கள் பங்கேற்பார்கள்.

பயிலரங்குக்குப் பின்னர், கோட்டயம், ஆலப்புழா மற்றும் திருச்சூர் மாவட்டங்களில் உள்ள கேரளாவில் உள்ள ஆயுஷ் மருத்துவமனைகளுக்கு  இரண்டு நாள் களப் பயணம் (2021 செப்டம்பர் 2025) ஏற்பாடு செய்யப்படும்.

இந்தத் தேசிய பயிலரங்கு ஆயுஷ் துறையில் டிஜிட்டல் பயன்பாட்டை வலுப்படுத்துவதிலும்மாநிலங்களுக்கு இடையேயான ஒத்துழைப்பை வளர்ப்பதிலும் முக்கியப் பங்காற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.

***

(Release ID: 2166280)

AD/PKV/RJ


(Release ID: 2166363) Visitor Counter : 2
Read this release in: English , Urdu , Hindi