சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம்
தூய்மையான காற்று விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் தில்லியில் 2,00,000-க்கும் அதிகமான மக்களை ஈர்த்துள்ளன
प्रविष्टि तिथि:
13 SEP 2025 11:48AM by PIB Chennai
சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகத்தால் ஆதரிக்கப்படும் உலகளாவிய இயற்கை நிதியம் - சுற்றுச்சூழல் தகவல், விழிப்புணர்வு, திறன் மேம்பாடு மற்றும் வாழ்வாதாரத் திட்டம், காற்றுத் தர மேலாண்மை ஆணையத்துடன் இணைந்து, தில்லி மக்களை தூய்மையான காற்றுக்காக ஒன்றிணைப்பதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ளது. 2025, ஜூன் - ஆகஸ்ட் மாதங்களுக்கு இடையே, 'மாற்றத்தின் மூச்சு - சுத்தமான காற்று, நீல வானம்' என்ற முதன்மை இயக்கத்தின் கீழ், 25 க்கும் அதிகமான பயிலரங்குகள் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. இந்த நிகழ்ச்சிகள் மாணவர்கள், பயணிகள் மற்றும் உள்ளூர் சமூகங்களை ஒன்றிணைத்தன. இவை தில்லியில் மிகவும் முக்கியமான, காற்று மாசுபாடு நிறைந்த பகுதிகளில் 2,00,000-க்கும் அதிகமான மக்களை சென்றடைந்தன.
பள்ளி வகுப்பறைகள் முதல் சுறுசுறுப்பான மெட்ரோ நிலையங்கள், தொழில்துறை பகுதிகள் முதல் பசுமை பூங்காக்கள் வரை, நிலையான வாழ்க்கைக்கான கூட்டு ஆற்றலை இந்தப் பிரச்சாரம் தூண்டியது. குழந்தைகள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், பயணிகள், குடியிருப்போர் நலச் சங்கத் தலைவர்கள் மற்றும் அனைத்துத் தரப்பு குடிமக்களும் காற்றின் தோழன் உறுதிமொழியேற்று தூய்மையான காற்றின் வெற்றியாளர்களாக செயல்பட முன்வந்தனர்.
இந்த அமர்வுகள் மற்றும் செயல்பாடுகள் மூலம், இந்தப் பிரச்சாரம் விழிப்புணர்வை ஏற்படுத்துவது மட்டுமின்றி, மாணவர்கள் பொறுப்புள்ள குடிமக்களாக மாற ஊக்குவித்தன. விழிப்புணர்வைப் பரவலாக்குவதாகவும், பட்டாசுகளை வெடிக்காமல் இருப்பதாகவும், மற்றவர்கள் அதைச் செய்வதைத் தடுப்பதாகவும் அனைத்து மாணவர்களும் உறுதியளித்தனர். கூட்டு விழிப்புணர்வு கூட்டு நடவடிக்கைக்கு வழிவகுக்கிறது என்பதை இந்தப் பிரச்சாரம் காட்டுகிறது.
***
(Release ID: 2166202)
AD/SMB/RJ
(रिलीज़ आईडी: 2166322)
आगंतुक पटल : 10