தேர்தல் ஆணையம்
azadi ka amrit mahotsav

தலைமைத் தேர்தல் அதிகாரிகள் அலுவலகத்தைச் சேர்ந்த ஊடகத் தொடர்பு அலுவலர்களுக்கான ஒருநாள் பயிலரங்கு

Posted On: 12 SEP 2025 4:48PM by PIB Chennai

புதுதில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் 36 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமைத் தேர்தல் அதிகாரிகள் அலுவலகத்தைச் சேர்ந்த ஊடகம் மற்றும் தகவல் தொடர்பு அலுவலர்களுக்கான ஒருநாள் பயிலரங்கை தேர்தல் ஆணையம் இன்று நடத்தியது. 51 ஊடக இணைப்பு அதிகாரிகள்சமூக ஊடக இணைப்பு அதிகாரிகள் ஆகியோரும் இதில் பங்கேற்றனர்.

தலைமைத் தேர்தல் ஆணையர்  திரு ஞானேஷ்குமார்தேர்தல் ஆணையர்கள் டாக்டர் சுக்பீர் சிங் சாந்துடாக்டர் விவேக் ஜோஷி ஆகியோர் தொடக்க அமர்வில் பங்கேற்பாளர்களிடையே   உரையாற்றினர்.

தவறான தகவல் அளிக்கும் அச்சுறுத்தல் அதிகரித்து வரும் நிலையில்இந்தியாவில் தேர்தல்கள் பற்றியும்அரசியல் சாசனத்திற்கு இணங்க உறுதியுடன் தேர்தல் நடத்தப்படுவது பற்றியும் தெளிவாக எடுத்துரைத்து உண்மைகள் மூலம் தவறான தகவலை முறியடிப்பது முக்கியமானது என்று இந்த பயிலரங்கில் எடுத்துரைக்கப்பட்டது.

ஊடகம் மற்றும் சமூக ஊடக கண்ணோட்டத்திலிருந்து சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் குறித்த சிறப்பு அமர்வு இந்தப் பயிலரங்கில் இடம் பெற்றது. தவறான தகவலை முறியடிப்பதற்கு பல்வேறு சாதனங்கள்தொழில்நுட்பங்கள்உத்திகள் குறித்த நிபுணர்களின் அமர்வும் நடைபெற்றது. இத்தகைய பயிலரங்கு ஏற்கனவே புதுதில்லியில் 2025 ஏப்ரல் 9ஜூன் 5 ஆகிய தேதிகளில் நடைபெற்றுள்ளது.

                                                                                   ***

 

AD/SMB/KPG/KR/SH

 
 
 

(Release ID: 2166160) Visitor Counter : 2