பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
13 ஓய்வூதிய குறைதீர்ப்பு முகாம்கள் மூலம் 18,481 குறைகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது: மத்திய இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்
Posted On:
10 SEP 2025 4:47PM by PIB Chennai
புதுதில்லி விஞ்ஞான் பவனில் இன்று (10.09.2025) நடைபெற்ற 14-வது ஓய்வூதிய குறைதீர்ப்பு முகாமிற்கு மத்திய பொதுமக்கள் குறைதீர்ப்பு மற்றும் ஓய்வூதியத் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தலைமை தாங்கினார். குடும்ப ஓய்வூதியதாரர்கள் மற்றும் மிக மூத்த ஓய்வூதியதாரர்கள் என்ற தலைப்பின் கீழ் ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியதாரர்கள் நலத்துறை இம்முகாமிற்கு ஏற்பாடு செய்திருந்தது. 21 துறைகள் மற்றும் அமைச்சகங்களில் குடும்ப ஓய்வூதியம் தொடர்பாக நீண்ட காலமாக நிலுவையில் உள்ள 894 குறைகள் தொடர்பான தகவல்கள், குறைதீர்ப்புக்காக எடுத்துக்கொள்ளப்பட்டன.
இந்த 14-வது ஓய்வூதிய குறைதீர்ப்பு முகாமை தொடங்கிவைத்துப் பேசிய டாக்டர் ஜிதேந்திர சிங், சம்பந்தப்பட்ட துறைகள், அமைச்சகங்கள் மற்றும் முகமைகளை ஒரே தளத்தில் கொண்டுவந்த இந்த முழுமையான அரசு அணுகுமுறைக்கு பாராட்டு தெரிவித்தார். கடந்த 13 ஓய்வூதிய முகாம்கள் மூலம் 25,800-க்கும் மேற்பட்ட ஓய்வூதியம் தொடர்பான குறைகளில் 18,481 குறைகளுக்கு தீர்வு காணப்பட்டதாக அவர் கூறினார். நாட்டை கட்டமைப்பதில் மதிப்புமிக்க பங்களிப்பாளர்களாக ஓய்வூதியதாரர்களை அரசு கருதுவதாக அவர் குறிப்பிட்டார். ஓய்வூதியதாரர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்களுக்கான கண்ணியம், உரிய நேரத்தில் நீதி, நிதி பாதுகாப்பு ஆகியவை உறுதி செய்யப்படுவதாக டாக்டர் ஜிதேந்திர சிங் கூறினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2165311
***
AD/IR/AG/KR
(Release ID: 2165346)
Visitor Counter : 2