தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
ஹரியானா மாநிலம் ரெவாரி நகரில் மொபைல் சேவைகளின் தரம் குறித்து ட்ராய் மதிப்பீடு
Posted On:
10 SEP 2025 11:44AM by PIB Chennai
பொது தொலைத்தொடர்பு வாடிக்கையாளர்களின் தகவலுக்காக, ஜூலை-ஆகஸ்ட் ஆகிய மாதங்களில் ஹரியானா மாநிலம் ரெவாரி நகரில் நடத்தப்பட்ட சேவைகளின் தரம் குறித்த சோதனை முடிவுகளை இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (ட்ராய்) வெளியிட்டுள்ளது. இந்த பரிசோதனை நடவடிக்கையின் நோக்கம், தொலைத்தொடர்பு சேவையில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள் வழங்கும் உலக தரத்திலான மொபைல் சேவைகளின் (குரல் மற்றும் தரவு இரண்டும்) உண்மையான தரத்தை மதிப்பீடு செய்வதும், அவற்றின் தன்மைகளை சரிபார்ப்பதும் ஆகும். இந்த சோதனை நடவடிக்கையின் போது, அழைப்புகளுக்கான அமைவுகளின் வெற்றி விகிதம், தரவு பதிவிறக்கம் மற்றும் பதிவேற்ற வேகம், குரல்களின் தரம் போன்ற முக்கிய அம்சங்களின் குறியீடுகள் மீதான செயல்திறன்களின் தரவை ட்ராய் சோதனை செய்கிறது. இது தொடர்பான தகவல்கள் வாடிக்கையாளர்களுக்குத் தெரிவிப்பதுடன், தொலைத்தொடர்பு சேவை வழங்கும் நிறுவனங்கள் தங்களது சேவைகளின் தரத்தை மேம்படுத்த உத்வேகம் அளிக்கும் வகையிலும் வெளியிடப்படுகின்றன.
இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தால் (ட்ராய்), அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்கள் மூலம், ஹரியானா மாநிலத்தில் 31-07-2025 முதல் 02-08-2025 வரை ரெவாரி நகரில் 250.70 கி.மீ. பரப்பிலான நகர்ப்புறப் பகுதிகளிலும், 8 முக்கியத்துவம் வாய்ந்த இடங்களிலும், 1.1 கி.மீ. தொலைவிற்கும் விரிவான சோதனைகள் நடத்தப்பட்டன. இந்த சோதனைகள் ஜெய்ப்பூரில் உள்ள ட்ராய் மண்டல அலுவலகத்தின் மேற்பார்வையின் கீழ் மேற்கொள்ளப்பட்டன. இந்த சோதனைகளின் விவரங்கள் தனியாக வெளியிடப்பட்டுள்ளன.
ரெவாரி நகரில் நடத்தப்பட்ட இந்த சோதனை, லக்னோர், கோகல்கர், சஹரன்வாஸ், கன்மஜாரா, பவால், உத்தம் நகர், பரவாஸ், ஷபாஜ்பூர், ஜலால்பூர், ஜாலியாவாஸ், பானிபூர் மற்றும் ஹர்சந்த்பூர் போன்ற அருகிலுள்ள பகுதிகளை உள்ளடக்கிய அனைத்து முக்கிய பகுதிகளையும் உள்ளடக்கியது.
இந்த சோதனை நடவடிக்கையில், 2ஜி, 3ஜி, 4ஜி மற்றும் 5ஜி சேவைகளில் உள்ள அனைத்து தொலைத்தொடர்பு சேவை வழங்கும் நிறுவனங்களின் சிம் கார்டுகளைப் பயன்படுத்தி பல்வேறு பயன்பாட்டு சூழல்களில், அதாவது வணிக மண்டலங்கள், முக்கிய இடங்கள், பொது போக்குவரத்து மையங்கள் போன்றவற்றில் நேரடி தரவு மற்றும் குரல் குறித்த தரம் பரிசோத்திக்கப்பட்டது. பல்வேறு மேம்பட்ட தொழில்நுட்பங்களைக் கொண்ட கைபேசிகள், மென்பொருளைப் பயன்படுத்தி குரல் மற்றும் தரவுகளின் தரம் நிகழ்நேரத்தில் கண்காணிக்கப்பட்டு பகுப்பாய்வு செய்யப்படுகின்றன.
***
(Release ID: 2165177)
AD/SV/AG/KR
(Release ID: 2165317)
Visitor Counter : 2