பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

வெடிப் பொருட்கள், டார்பெடோ மற்றும் ஏவுகணையை கொண்ட 11-வது கடற்படை கப்பல் எல்எஸ்ஏஎம்-25 அறிமுகம்

Posted On: 09 SEP 2025 10:15AM by PIB Chennai

தானேயில் உள்ள சூரியதீப்தா பிராஜெக்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் வெடிப் பொருட்கள், டார்பெடோ மற்றும் ஏவுகணையை கொண்ட 11-வது கடற்படை கப்பலான எல்எஸ்ஏஎம்-25 (தளம் 135)-ன் வெள்ளோட்ட நிகழ்வு 2025 செப்டம்பர் 8 அன்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் ரியர் அட்மிரல் விஷால் பிஷ்னோய் தலைமை விருந்தினராக கலந்துகொண்டார்.

வெடிப் பொருட்கள், டார்பெடோ மற்றும் ஏவுகணையை கொண்ட 11 கடற்படை கப்பல்களை கட்டமைக்கும் ஒப்பந்தம் எம்எஸ்எம்இ கப்பல் கட்டும் தளமான சூரியதீப்தா பிராஜெக்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் 2021 மார்ச் 05 அன்று இறுதிசெய்யப்பட்டது. இந்த கடற்படை கப்பல்கள் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டு, இந்திய கப்பல் வடிவமைப்பு நிறுவனம் மற்றும் கப்பல் போக்குவரத்திற்கான இந்தியப் பதிவகம் ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் இந்த கப்பல் கட்டும் தளத்தில் கட்டப்பட்டன. இவை கடல் தகுதிக்கு பொருத்தமானவையா என்பதை சோதிக்க  விசாகப்பட்டனத்தில் உள்ள கடற்படை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆய்வகத்தால் மாதிரி சோதனை மேற்கொள்ளப்பட்டது. ஏற்கனவே இந்த கப்பல் கட்டும் தளம் வெற்றிகரமாக 10 கடற்படை கப்பல்களை வழங்கியுள்ளது. இவை செயல்பாட்டு மேம்பாடுகளுக்காக இந்திய கப்பற்படையால் பயன்படுத்தப்படுகின்றன.

இந்தக் கப்பற்படை கப்பல்கள் மத்திய அரசின் மேக்-இன்- இந்தியா மற்றும் தற்சார்பு இந்தியா முன்முயற்சிகளின் பெருமைமிகு முன்னோடிகளாக விளங்குகின்றன.

***

(Release ID: 2164828 )

SS/SMB/AG/KR


(Release ID: 2164913) Visitor Counter : 2