விண்வெளித்துறை
விண்வெளி பயணத்தில் இந்தியா சிறப்பிடம் பெற்றுள்ளது- மத்திய இணை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்
Posted On:
08 SEP 2025 3:53PM by PIB Chennai
2040-ம் ஆண்டிற்குள் சந்திரனில் இந்திய விண்வெளி வீரரை தரையிரங்கச் செய்வது, 2035-ம் ஆண்டிற்குள் இந்திய விண்வெளி நிலையத்தை அமைப்பது போன்ற லட்சிய இலக்குகளுடன் இந்தியா தமது விண்வெளி பயணத்தில் மாற்றகரமான கட்டத்தை அடைந்துள்ளதாக மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், விண்வெளித்துறை இணை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.
விண்வெளி 2025 குறித்த சர்வதேச மாநாட்டின் தொடக்க அமர்வில் காணொளிக் காட்சி வாயிலாக அவர் உரையாற்றினார். இந்தியாவின் விண்வெளி சாதனைகள் குறித்து எடுத்துரைத்த அவர், சந்திரயான் 3 வெற்றி குறித்து குறிப்பிட்டார். இதன்மூலம் சந்திரனின் தென் துருவத்தில் இறங்கிய முதலாவது நாடு என்ற வகையில், முன்னணி விண்வெளிப் பயண நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது என்று குறிப்பிட்டார்.
சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்ற முதலாவது இந்திய விமானப்படை அதிகாரி குரூப் கேப்டன் சுபான்ஷூ சுக்லாவின் சாதனைகள் குறித்து அவர் குறிப்பிட்டார்.
மேலும் மனித விண்வெளிப் பயணத் திட்டமான ககன்யானுடன் செவ்வாய், வெள்ளி மற்றும் சிறுகோள்களுக்கான இந்தியாவின் ஆய்வுப் பணிகளையும் அவர் சுட்டிக்காட்டினார்.
பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் தொடங்கப்பட்ட சீர்திருத்தங்களின் பங்களிப்பை டாக்டர் ஜிதேந்திர சிங் சுட்டிக்காட்டினார். அவை இத்துறையை தனியார் பங்கேற்பு, புத்தொழில் நிறுவனங்கள் மற்றும் கல்வியாளர்களுக்கு வாய்ப்பு ஏற்படுத்தியதாகக் கூறினார். செலுத்து வாகனங்கள், செயற்கைக்கோள்கள் தற்போது 300க்கும் அதிகமான புத்தொழில் நிறுவனங்கள் செயல்பட்டு வருவதாக தெரிவித்தார். இது புதுமை கண்டுபிடிப்புகளை வளர்ப்பதோடு, இளம் நிபுணர்களுக்கு வேலைவாய்ப்புகள், முதலீடுகள் மற்றும் வாய்ப்புகளையும் ஏற்படுத்துகிறது என்று அவர் கூறினார்.
விண்வெளியின் உண்மையான மதிப்பு வேளாண்மை மற்றும் சுகாதாரம் முதல் கல்வி, நகர்ப்புற மேம்பாடு மற்றும் நிர்வாகம் வரை நாள்தோறும் அதன் பயன்பாடுகளில் உள்ளது என்று அவர் குறிப்பிட்டார். விண்வெளியின் அனைத்து துறையையும் மேம்படுத்த வேண்டும் மற்றும் சாதாரண மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்று டாக்டர் ஜிதேந்திர சிங் தெரிவித்தார்.
***
SS/IR/LDN/KR
(Release ID: 2164790)
Visitor Counter : 2