உணவுப் பதப்படுத்துதல் தொழிற்சாலைகள் அமைச்சகம்
ஜிஎஸ்டி வரி சீர்திருத்தம் நுகர்வோர் மற்றும் சிறுவணிகர்களுக்கு பெரும் நிவாரணம் வழங்குகிறது
Posted On:
08 SEP 2025 1:53PM by PIB Chennai
சரக்கு மற்றும் சேவைகள் வரி (ஜிஎஸ்டி) கவுன்சிலின் 56-வது கூட்டத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவுகள் மேற்கொள்ளப்பட்டன. இதையடுத்து 5%, 12%, 18%, 28% என நான்கு படிநிலைகளில் இருந்த ஜிஎஸ்டி வரிவிகிதங்கள், 5%, 18% என இரண்டு படிநிலைகளாக மாற்றப்பட்டுள்ளன. சொகுசுப் பொருட்களுக்கு 40% வரிவிதிப்பு இருக்கும். இந்த மாற்றங்கள் 2025 செப்டம்பர் 22 முதல் அமலுக்கு வருகின்றன.
ஜிஎஸ்டி வரி விகித மாற்றங்களால் உணவுப்பதனத் தொழில்துறை பெருமளவு பயனடைந்துள்ளது. பாதாம், பாஸ்தா, பழங்கள், காய்கறிகள், ஜாம், பழச்சாறுகள், சோயா பால் பானங்கள், பழக்கூழ் அடிப்படையிலான பானங்கள் போன்றவற்றுக்கான ஜிஎஸ்டி வரி 12 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. கோக்கோ வெண்ணெய், கோக்கோ பவுடர், கோக்கோ சேர்த்து தயாரிக்கப்பட்ட சாக்லேட்டுகள், சூப் வகைகள், ஐஸ்கிரீம் போன்றவற்றுக்கான ஜிஎஸ்டி வரி 18 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.
இத்தகைய வரிக்குறைப்பால், உற்பத்தித் துறை ஊக்கம் பெறும். இதன் காரணமாக இத்துறையில் முதலீடு அதிகரித்து வேலைவாய்ப்பும் அதிகரிக்கும். மேலும், விவசாயிகள் மற்றும் உணவுப்பதன தொழில்துறையினரின் வருவாய் அதிகரிக்கும். சில்லறை விற்பனை விலை குறைவதால், தேவை அதிகரிப்பதோடு நுகர்வும் அதிகரிக்கும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2164586
***
SS/SMB/KPG/KR
(Release ID: 2164685)
Visitor Counter : 2