வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
ஆரிக் ஸ்மார்ட் நகரம் ஆறு ஆண்டுகால சாதனையைக் கொண்டாடுகிறது
Posted On:
07 SEP 2025 4:41PM by PIB Chennai
மகாராஷ்டிராவின் சத்ரபதி சம்பாஜிநகரில் உள்ள ஆரிக் (AURIC) (ஷேந்திரா-பிட்கின் தொழில்துறை பகுதி) அதன் ஆறாவது ஆண்டு நிறைவை பெருமையுடன் கொண்டாடுகிறது. தொழில்துறை முன்னேற்றம், உலகளாவிய முதலீடுகள் மற்றும் நிலையான வளர்ச்சியின் பயணம் இந்தக் கொண்டாட்டத்தில் பிரதிபலிக்கிறது. இது தேசிய தொழில்துறை வழித்தட மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட இந்தியாவின் முதல் பசுமைத் தொழில்துறை ஸ்மார்ட் நகரங்களில் ஒன்றாகும்.
ஆறு ஆண்டுகளில், தொழில்துறை மற்றும் கலப்பு-பயன்பாட்டு பிரிவில், 323 மனைகள் ஒதுக்கப்பட்டுள்ளன, இதில் 3,029 ஏக்கர் தொழில்துறை நிலமும், 117 ஏக்கர் கலப்பு-பயன்பாட்டு நிலமும் அடங்கும். மொத்த முதலீட்டு திறன் ரூ. 71,343 கோடிக்கும் அதிகமாகும். இதில் 62,405 பேருக்கு (நேரடி மற்றும் மறைமுக) வேலைவாய்ப்பு திறன் உள்ளது.
தற்போது, 78 அலகுகள் செயல்பாட்டில் உள்ளன. 62 தொழிற்சாலைகள் கட்டுமானத்தில் உள்ளன. மேலும் 184 அலகுகள் கட்டுமானத்தைத் தொடங்கத் தயாராகி வருகின்றன.
ஷென்ட்ரா தொழில்துறை பகுதியில் 135 எம்எஸ்எம்இ-க்கள், 17 பெரிய அளவிலான திட்டங்கள் மற்றும் 16 எம்எஸ்எம்இ-க்கள் அல்லாத நிறுவனங்களுக்கு நிலங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன (தென் கொரியாவின் ஹியோசங் போன்ற முன்னணி முதலீட்டாளர்கள் இந்தியாவில் தனது முதல் ஸ்பான்டெக்ஸ் ஆலையை இங்கு தொடங்கியுள்ளனர்).
49 எம்எஸ்எம்இ-க்கள் மற்றும் 27 பெரிய அளவிலான திட்டங்களுக்கும், பிட்கின் தொழில்துறை பகுதியில் 4 எம்எஸ்எம்இ-க்கள் அல்லாத நிறுவனங்களுக்கும் நிலங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இது வாகனத் தயாரிப்பு, மின்சார வாகனங்கள் தயாரிப்பு , பாலிமர்கள், பொறியியல் போன்ற உலகத் தரம் வாய்ந்த நிறுவனங்களை ஈர்க்கிறது.
AURIC-ல் தொழில்துறை நிலம் கிட்டத்தட்ட முழுமையாக ஒதுக்கப்பட்டுள்ளது, இது அதன் உள்கட்டமைப்பு மற்றும் கொள்கை கட்டமைப்பில் முதலீட்டாளர்களின் நம்பிக்கை அடங்கியுள்ளது.
AURIC இல் பணியாளர் திறன்களை மேம்படுத்தவும், தொழில்துறையுடன் திறமையை இணைக்கவும் இந்திய தொழில்துறை கூட்டமைப்புடன் இணைந்து 20,000 சதுர அடி திறன் மேம்பாட்டு மையத்தை நிறுவ முன்மொழியப்பட்டுள்ளது.
ஏப்ரல் 1 முதல், எம்எஸ்எம்இ-க்களுக்கான அலுவலக இட வாடகை சதுர அடிக்கு ரூ 50 லிருந்து ரூ 25 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.
***
(Release ID: 2164493)
AD/PKV/SG
(Release ID: 2164526)
Visitor Counter : 2