பெருநிறுவனங்கள் விவகாரங்கள் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

குறைந்த மதிப்புள்ள உரிமைகோரல்களுக்கான எளிமைப்படுத்தப்பட்ட ஆவண நடைமுறைகள் - ஐஇபிஎஃப்ஏ-விடம் அறிக்கையை அளித்தது ஆலோசனைக் குழு

Posted On: 06 SEP 2025 2:42PM by PIB Chennai

பெருநிறுவன விவகார அமைச்சகத்தின் கீழ் உள்ள முதலீட்டாளர் கல்வி மற்றும் பாதுகாப்பு நிதி ஆணையமான ஐஇபிஎஃப்ஏ (IEPFA), குறைந்த மதிப்புள்ள உரிமைகோரல்களில் ஆவணங்களை எளிமைப்படுத்துவதற்கான தற்போதைய நடைமுறைகளை மறுபரிசீலனை செய்து சீர்திருத்தங்களை பரிந்துரைப்பதற்காக ஒரு குழுவை அமைத்தது. இந்த முயற்சி காலக்கெடுவை கணிசமாகக் குறைத்து, வெளிப்படைத்தன்மையை மேம்படுத்தி, முதலீட்டாளர்களுக்கு சிக்கல் இல்லாத சேவைகளை வழங்கும்.

இந்தக் குழுவில் பெருநிறுவன விவகார அமைச்சகம், முதலீட்டாளர் கல்வி மற்றும் பாதுகாப்பு நிதி ஆணையம் (ஐஇபிஎஃப்ஏ), இந்தியப் பங்குப் பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை வாரியம் (SEBI - செபி), இந்திய பட்டயக் கணக்காளர்கள் நிறுவனம் (ICAI), இந்திய செலவுக் கணக்காளர்கள் நிறுவனம், இந்திய நிறுவனச் செயலாளர்கள் நிறுவனம், இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை கூட்டமைப்பு (ஃபிக்கி), வர்த்தக மற்றும் தொழில்துறை சங்கம், இந்திய தொழில்துறை கூட்டமைப்பு (சிஐஐ), இந்தியப் பதிவாளர் சங்கம் ஆகியவற்றின் பிரதிநிதிகள் இருந்தனர். இந்தக் குழு தமது அறிக்கையை ஐஇபிஎஃப்ஏ-விடம் சமர்ப்பித்துள்ளது.

ஐஇபிஎஃப்ஏ இதை ஏற்றுக்கொண்டவுடன், இந்தப் பரிந்துரைகள், குழு பரிந்துரைத்தபடி, 5 லட்சம் (நேரடி பத்திரங்கள்), 15 லட்சம் (டிமேட் பத்திரங்கள்), 10,000 வரையிலான ஈவுத்தொகை வரையிலான கோரிக்கைகளுக்குப் பொருந்தும்.

ஐஇபிஎஃப்ஏ பற்றி:

மத்திய அரசின் பெருநிறுவன விவகார அமைச்சகத்தின் கீழ், முதலீட்டாளர் கல்வி மற்றும் பாதுகாப்பு நிதி ஆணையமான ஐஇபிஎஃப்ஏ 2016 செப்டம்பர் 07 அன்று நிறுவப்பட்டது. பங்குகள், உரிமை கோரப்படாத ஈவுத்தொகைகள், முதிர்ச்சியடைந்த வைப்புத்தொகைகள், கடனீட்டுப் பத்திரங்கள் ஆகியவற்றை உரிய முதலீட்டாளர்களிடம் திரும்ப வழங்குவதன் மூலம் முதலீட்டாளர்களின் நலன்களைப் பாதுகாத்து, அதை நிர்வகிக்கும் பொறுப்பு ஐஇபிஎஃப்ஏ-வுக்கு உள்ளது. அதன் முயற்சிகள் மூலம், ஐஇபிஎஃப்ஏ வெளிப்படைத்தன்மையை உறுதி செய்தல், முதலீட்டாளர்களின் உரிமைகளைப் பாதுகாத்தல், நாடு முழுவதும் நிதி கல்வியறிவை மேம்படுத்துதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு செயல்படுகிறது.

ஐஇபிஎஃப்ஏ பற்றி மேலும் அறிந்து கொள்ள www.iepf.gov.in என்ற இணையதளத்தைப் பார்க்கலாம்.

****

(Release ID: 2164368)

AD/PLM/SG

 


(Release ID: 2164373) Visitor Counter : 2
Read this release in: English , Urdu , Marathi , Hindi