பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
பழைய பொருட்கள் மூலமாக ₹3,296.71 கோடி வருவாய் ஈட்டிய சிறப்பு தூய்மை இயக்கம்
Posted On:
03 SEP 2025 6:24PM by PIB Chennai
அக்டோபர் 2-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை சிறப்பு இயக்கம் 5.0 நடைபெற உள்ளதை முன்னிட்டு, இதற்கான முன்னேற்பாடுகள் குறித்த இரண்டாவது ஆய்வுக் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு மத்திய நிர்வாக சீர்திருத்தங்கள் மற்றும் பொதுமக்கள் குறைதீர்ப்புத்துறை செயலாளர் திரு வி ஸ்ரீனிவாஸ் தலைமை தாங்கினார். மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம், நிலக்கரி அமைச்சகம், அஞ்சல் துறை உட்பட 84 அமைச்சகங்கள்/துறைகளைச் சேர்ந்த 497 உயர் அதிகாரிகள் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர். வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகத்தின் செயலாளர் திரு ஸ்ரீநிவாஸ் ராமசுவாமி கதிகிதலா, சிறப்பு இயக்கத்தின் முதன்மை அதிகாரிகளிடையே உரையாற்றினார். தூய்மையை நிறுவனமயமாக்குதல், மத்திய அரசு அலுவலகங்களில் நிலுவையில் உள்ள பணிகளை குறைப்பது ஆகிய நோக்கங்களுடன் இந்த சிறப்பு இயக்கம் 5.0 நடைபெறவிருக்கிறது.
இரண்டு கட்டங்களாக நடைபெறும் இயக்கத்தின் ஆயத்த பணிகள் செப்டம்பர் 15 முதல் 30 வரையும், அமல்படுத்தல் பணிகள் அக்டோபர் 2 முதல் 31 வரையும் நடத்தப்படும். செப்டம்பர் 15 அன்று மத்திய பணியாளர் நலன், பொதுமக்கள் குறைதீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் துறை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் இந்த சிறப்பு இயக்கத்தைத் தொடங்கி வைப்பார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2163419
***
(Release ID: 2163419)
SS/BR/KR
(Release ID: 2163603)
Visitor Counter : 2