மத்திய பணியாளர் தேர்வாணையம்
azadi ka amrit mahotsav

யுபிஎஸ்சி-இன் நூற்றாண்டு விழா கொண்டாட்டங்கள் அக்டோபர் 2025 முதல் தொடங்கும்

Posted On: 03 SEP 2025 5:19PM by PIB Chennai

அக்டோபர் 1, 2025 முதல் அக்டோபர் 1, 2026  வரை தனது  நூற்றாண்டு விழா கொண்டாட்டங்களை நடத்தவிருக்கும் மத்திய பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி), பல்வேறு மாநில பணியாளர்  தேர்வாணையங்கள் மற்றும் யுபிஎஸ்சி-இன் சிறந்த நடைமுறைகளின் களஞ்சியமாக ஒரு சிறப்பு மையத்தை நிறுவ திட்டமிட்டுள்ளது.  மாநில பணியாளர்  தேர்வாணையங்களின் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களுடன் நடைபெற்ற கூட்டத்திற்குத் தலைமை தாங்கிய யுபிஎஸ்சி தலைவர் டாக்டர் அஜய்குமார், இந்த அறிவிப்பை வெளியிட்டார்.   காணொலிக் காட்சி வாயிலாக நடைபெற்ற கூட்டத்தில் யுபிஎஸ்சி உறுப்பினர்கள் டாக்டர் தினேஷ் தாசா மற்றும்  திருமிகு அனுராதா பிரசாத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 

இந்த சிறப்பு மையம், வழிகாட்டு  நடைமுறைகள் (SOPs),  புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் யுபிஎஸ்சி மற்றும் மாநில பணியாளர்  தேர்வாணையங்களில் இருந்து பெறப்பட்ட முக்கிய முடிவுகள் ஆகியவற்றின் அறிவுசார் மையமாக செயல்படும்  என்று டாக்டர் அஜய்குமார் தெரிவித்தார்.  இந்த சிறப்பு மையத்தை அமைப்பதில் யுபிஎஸ்சி  முன்னிலை வகித்தாலும், சிறந்த நடைமுறைகள் மற்றும் அறிவுசார்  பகிர்வில்   மாநில பணியாளர்  தேர்வாணையங்களின் பங்களிப்பு மிக முக்கியமானதாக இருக்கும் என்று அவர் வலியுறுத்தினார். முன்மொழியப்பட்ட சிறப்பு மையம் குறித்த கருத்துக்களைத் தெரிவிக்குமாறு மாநில பணியாளர் தேர்வாணையங்களின் தலைவர்களிடம் அவர் கேட்டுக் கொண்டார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2163379

 

***

(Release ID: 2163379)

SS/RB/DL


(Release ID: 2163515) Visitor Counter : 2
Read this release in: English , Gujarati , Urdu , Hindi