ஆயுஷ்
மக்களுக்குத் தரமான சுகாதார சேவைகளை வழங்குவதை ஆயுஷ் அமைச்சகம் நோக்கமாகக் கொண்டுள்ளது : மத்திய இணையமைச்சர் திரு பிரதாப் ராவ் ஜாதவ்
प्रविष्टि तिथि:
03 SEP 2025 5:21PM by PIB Chennai
புதுதில்லியில் அகில இந்திய ஆயுர்வேத நிறுவனத்தில் நடைபெற்ற மாநிலங்களில் தேசிய ஆயுஷ் இயக்கம் மற்றும் திறன் மேம்பாடு குறித்த துறை வாரியான மாநாட்டை மத்திய ஆயுஷ் துறை இணையமைச்சர் திரு பிரதாப் ராவ் ஜாதவ் இன்று தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் பேசிய அவர், மாநிலத்தின் குறிப்பிட்ட தேவைகளுக்கு ஏற்ப அனைத்தையும் உள்ளடக்கிய சுகாதாரக் கட்டமைப்பை உருவாக்குவதற்கான அரசின் உறுதிபாடு குறித்து எடுத்துரைத்தார். நாட்டின் சுகாதார வசதிகள் விநியோகத்தை மேம்படுத்துவதற்காக விரிவான நிலையான செயல்பாட்டு நடைமுறைகளை உருவாக்குவதற்கான அரசின் அணுகுமுறை குறித்து விளக்கினார். மக்களுக்குத் தரமான சேவைகளை வழங்குவது, நவீன சுகாதார அமைப்புடன் ஆயுஷை ஒருங்கிணைப்பதை உறுதி செய்வது ஆகியவை தங்கள் நோக்கம் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2163381
***
SS/IR/KPG/DL
(रिलीज़ आईडी: 2163448)
आगंतुक पटल : 10