உள்நாட்டு விமானப் போக்குவரத்து அமைச்சகம்
நிலையான விமான எரிபொருள் உற்பத்தியில் இந்தியா தற்சார்பை அடையும்: மத்திய அமைச்சர் திரு ராம் மோகன் நாயுடு
प्रविष्टि तिथि:
03 SEP 2025 1:31PM by PIB Chennai
சர்வதேச சிவில் விமானப் போக்குவரத்து அமைப்புடன் இணைந்து ஐரோப்பிய ஒன்றிய ஆதரவுடன் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம், இந்தியாவுக்கான நீடித்த விமான எரிபொருள் சாத்தியக் கூறு குறித்த ஆய்வை இன்று வெளியிட்டது. இந்த நிகழ்ச்சியில், விமானப் போக்குவரத்து அமைச்சர் திரு ராம் மோகன் நாயுடு, விமானப் போக்குவரத்துத் துறைச் செயலாளர் திரு சமீர் குமார் சின்ஹா விமானப் போக்குவரத்து தலைமை இயக்குநர் திரு ஃபைஸ் அகமது சர்வதேச விமானப் போக்குவரத்து அமைப்பின் சுற்றுச்சூழல் துணை இயக்குநர் ஜேன் ஹுப் ஆகியோர் உரையாற்றினார்கள்.
இந்த ஆய்வு குறித்து புதுதில்லியில் உதான் பவனில் நடைபெறும் இரண்டு நாள் பயிலரங்கில் விவாதிக்கப்பட உள்ளது. இந்நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் திரு ராம் மோகன் நாயுடு, இந்தியாவின் நிலையான விமானப் போக்குவரத்து வளர்ச்சியை மேம்படுத்துவதில் நிலையான விமான எரிபொருளின் முக்கியப் பங்கை சுட்டிக்காட்டினார். நிலையான விமான எரிபொருள் என்பது விமானத்துறையில் கார்பன் உமிழ்வை நீக்கம் செய்வதற்கான நடைமுறை மற்றும் உடனடி தீர்வாகும் என்று அவர் தெரிவித்தார். வழக்கமான எரிபொருளுடன் ஒப்பிடும் போது கார்பன் உமிழ்வை 80 சதவீதம் அளவிற்கு குறைக்கும் திறனுடையது என்று அவர் கூறினார். இந்தியாவில் 750 மில்லியன் மெட்ரிக் டன்னுக்கும் அதிகமான உயிரி எரிபொருள் மற்றும் 230 மெட்ரிக் டன் அளவிலான கூடுதல் வேளாண் கழிவுகள் உள்ளன. இதன் மூலம், நிலையான விமான எரிபொருளில் தமது சொந்த தேவையை நிறைவேற்றுவதோடு மட்டுமின்றி உலகளாவிய தலைவராகவும் முன்னணி ஏற்றுமதியாளராகவும் இந்தியா உருவெடுக்க முடியும் என்று குறிப்பிட்டார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2163273
***
SS/IR/KPG/KR
(रिलीज़ आईडी: 2163364)
आगंतुक पटल : 18