தேசிய மனித உரிமைகள் ஆணையம்
azadi ka amrit mahotsav

ஒடிசாவில் பத்திரிகையாளர் தாக்கப்பட்டது குறித்து தேசிய மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை மேற்கொள்கிறது

Posted On: 03 SEP 2025 2:18PM by PIB Chennai

ஒடிசாவில் நபாரங்பூர் மாவட்டத்தின் பாபடஹண்டி பகுதியில் தமக்கு எதிராக புகார் அளித்ததற்காக பத்திரிகையாளர் மீது போதைப் பொருளுக்கு அடிமையான ஒருவர் தாக்குதல் நடத்தி காயம் ஏற்படுத்தியது குறித்த செய்தி 2025 ஆகஸ்ட் 29 அன்று ஊடகங்களில் வெளியானதையடுத்து தேசிய மனித உரிமைகள் ஆணையம் (என்எச்ஆர்சி) தாமாக முன்வந்து விசாரணை மேற்கொள்கிறது. தாக்கப்பட்ட அந்த பத்திரிகையாளர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்தச் செய்தி உண்மை எனில் இது மனித உரிமைகளை மீறியதாகும் என்று ஆணையம் கருதுகிறது. இது தொடர்பாக விரிவான அறிக்கையை இரண்டு வாரங்களுக்குள் சமர்ப்பிக்குமாறு ஒடிசா மாநில காவல் துறை தலைவருக்கு ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

புலன் விசாரணை மற்றும் காயமடைந்த பத்திரிகையாளரின் உடல்நிலை குறித்த தகவல்கள் அந்த அறிக்கையில் இடம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

***

(Release ID: 2163293)

SS/IR/KPG/KR

 


(Release ID: 2163359) Visitor Counter : 2
Read this release in: English , Urdu , Hindi , Odia