பாதுகாப்பு அமைச்சகம்
இந்திய கடற்படையின் முதல் பயிற்சிப் படை கப்பல்கள் செஷல்ஸின் விக்டோரியா துறைமுகத்தைச் சென்றடைந்தன
प्रविष्टि तिथि:
02 SEP 2025 4:55PM by PIB Chennai
இந்திய கடற்படையின் முதல் பயிற்சிப் படையின் (1TS) ஐஎன்எஸ் திர், ஐஎன்எஸ் ஷர்துல் மற்றும் கடலோரக் காவல்படையின் சாரதி ஆகிய கப்பல்கள் செப்டம்பர் 01, 2025 அன்று செஷல்ஸின் போர்ட் விக்டோரியா துறைமுகத்தைச் சென்றடைந்தன. முதல் பயிற்சிப் படை கப்பல்கள், தற்போது தென்மேற்கு இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் நீண்ட தூர பயிற்சிப் பணியில் ஈடுபட்டுள்ளன.
துறைமுகத்தில், இந்திய கப்பல்களுக்கு செஷல்ஸ் பாதுகாப்புப் படை (SDF) இசைக்குழுவினரால் பாரம்பரிய முறையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. இது இரு நாடுகளுக்கும் இடையிலான வலுவான கடல்சார் உறவுகளை வலியுறுத்துகிறது. இந்த வருகையின் போது, பயிற்சிப் படை கப்பல்களின் மூத்த அதிகாரி கேப்டன் டிஜோ கே ஜோசப், செஷல்ஸ் அரசின் முக்கிய பிரமுகர்கள், பாதுகாப்புப் படையின் மூத்த அதிகாரிகள் மற்றும் இந்திய தூதரக அதிகாரியை சந்திக்க உள்ளார்.
2025-ம் ஆண்டில்
செஷல்ஸுக்கு இந்திய கடற்படைக் கப்பல்களின் மூன்றாவது துறைமுக பயணமாக இது அமைந்துள்ளது. இது இந்திய கடற்படையின் வலுவான இருதரப்பு செயல்பாடு மற்றும் இந்திய பெருங்கடல் பகுதியில் உள்ள மகாசாகரின் பரந்த தொலைநோக்குப் பார்வையுடன் இணைந்த கடல்சார் கூட்டாண்மையை எடுத்துக்காட்டுகிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2163083
***
(Release ID: 2163083)
AD/RB/DL
(रिलीज़ आईडी: 2163216)
आगंतुक पटल : 17