விவசாயத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

உலக தென்னை தினத்தை முன்னிட்டு சிறந்த ஏற்றுமதிக்கான விருதுகளை தமிழ்நாட்டு நிறுவனங்கள் வென்றன

Posted On: 02 SEP 2025 4:17PM by PIB Chennai

தென்னை மேம்பாட்டு வாரியம் (CDB), தனது புதிய திருத்தப்பட்ட திட்டங்களை அறிமுகப்படுத்தி, சிறந்த ஏற்றுமதிக்கான  விருதுகளை வழங்கி உலக தென்னை தினத்தைக் கொண்டாடியது.  தேங்காய் ஓடு அடிப்படையிலான சிறந்த தயாரிப்பின் ஏற்றுமதியாளருக்கான தங்க விருதை, திருப்பூரின் யுனைடெட் கார்பன் சொல்யூஷன்ஸ் நிறுவனம் வென்றது. திருநெல்வேலியின் நோவா கார்பன்ஸ் இந்தியா நிறுவனமும்  கோவையில் உள்ள ஜாக்கோபி கார்பன்ஸ் இந்தியா நிறுவனமும் முறையே வெள்ளி மற்றும் வெண்கல பதக்கங்களை வென்றன. பொள்ளாச்சியில் உள்ள சக்தி கோகோ தயாரிப்புகள் நிறுவனம், சிறந்த தேங்காய் நீர் சார்ந்த தயாரிப்பு ஏற்றுமதியாளருக்கான தங்க விருதைப் பெற்றது. கோயம்புத்தூரில் உள்ள கார்பர் ஆக்டிவேட்டட் கார்பன் நிறுவனம், சிறந்த பெண் ஏற்றுமதியாளருக்கான விருதையும், திருப்பூரின் குளோபல் கோகோனட் ஃபார்மர்ஸ் ப்ரொடியூசர் நிறுவனம், சிறந்த உழவர் உற்பத்தியாளர் அமைப்பு (FPO) ஏற்றுமதியாளராகவும் அங்கீகரிக்கப்பட்டன.

இந்த நிகழ்வில் பேசிய நாடாளுமன்ற உறுப்பினரும், தென்னை மேம்பாட்டு வாரிய உறுப்பினருமான திரு. எம்.கே. ராகவன், தென்னை பதப்படுத்துதல் மற்றும் தயாரிப்பு பல்வகைப்படுத்தலில் ஒருங்கிணைந்த முயற்சிகளின் அவசியத்தை வலியுறுத்தினார். தென்னை சாகுபடி மற்றும் தொழில்துறையின் மேம்பாட்டிற்காக அரசு பல திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது என்றும்வாரியத்தின் பல்வேறு திட்டங்களின் கீழ் நிதி உதவி பன்மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது என்றும் கூறினார்.

 

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2163062

***

(Release ID: 2163062)

AD/RB/DL


(Release ID: 2163215) Visitor Counter : 4