தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
டிஜிபின் முன்முயற்சியை வலுப்படுத்த அஞ்சல் துறை மற்றும் இஎஸ்ஆர்ஐ இந்தியா இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து
प्रविष्टि तिथि:
01 SEP 2025 7:35PM by PIB Chennai
புவியியல் தகவல் அமைப்புமுறை மென்பொருள் மற்றும் தீர்வுகள் வழங்குநரான இஎஸ்ஆர்ஐ இந்தியா தொழில்நுட்ப தனியார் நிறுவனத்துடன் அஞ்சல் துறை, ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ், அஞ்சல் துறை, அதன் டிஜிபின் தளத்திற்காக இஎஸ்ஆர்ஐ இந்தியாவின் உயர் தெளிவுத்திறன் கொண்ட படங்கள் மற்றும் சாலைகளின் அடிப்படை வரைபடங்களைப் பயன்படுத்த முடியும். இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம், டிஜிபின்-ஐ இஎஸ்ஆர்ஐ இந்தியாவின் லிவிங் அட்லஸ் தளத்துடன் ஒருங்கிணைக்கவும் உதவும். மேலும், டிஜிபின்-கான தங்கள் சேவைகளை தடையின்றி ஒருங்கிணைப்பதற்காக, இஎஸ்ஆர்ஐ இந்தியா, அஞ்சல் துறைக்கு தொழில்நுட்ப ஆதரவை வழங்கும்.
இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம், டிஜிபின்-இன் வளர்ச்சி மற்றும் செயல்படுத்துதலை ஆதரிக்க இஎஸ்ஆர்ஐ இந்தியாவின் மேப்பிங் தீர்வுகளைப் பயன்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது, இதன் மூலம், டிஜிபின் அமைப்புமுறையை மிகவும் வலுவானதாகவும் குடிமக்களுக்கு ஏற்றதாகவும் மாற்றுகிறது.
புதுதில்லியின் டாக் பவனில் நடைபெற்ற நிகழ்வில், இந்திய அஞ்சல் துறை, இஎஸ்ஆர்ஐ-இன் நியமிக்கப்பட்ட பிரதிநிதிகளால் இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
இந்த நிகழ்வில் பேசிய அஞ்சல் துறையின் செயல்பாடுகள் பிரிவு உறுப்பினர் திரு. ஹர்ப்ரீத் சிங், "இஎஸ்ஆர்ஐ இந்தியாவுடனான புரிந்துணர்வு ஒப்பந்தம், டிஜிபின் முன்முயற்சியின் தொலைநோக்குப் பார்வையை உணர்ந்து கொள்வதில் ஒரு முக்கியமான முயற்சியைக் குறிக்கிறது. இஎஸ்ஆர்ஐ-இன் வலுவான அடிப்படை வரைபடங்கள் மற்றும் புவிசார் தொழில்நுட்பத்தின் உதவியுடன், டிஜிபின், துல்லியம் மற்றும் எளிதில் அணுகும் தன்மையுடன்குடிமக்களுக்கும் அரசு சேவைகளுக்கும் அதிகாரமளிக்கும்", என்று கூறினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2162858
***
SS/BR/KR
(रिलीज़ आईडी: 2162961)
आगंतुक पटल : 16