கப்பல் போக்குவரத்து அமைச்சகம்
azadi ka amrit mahotsav

சிறு வணிகர்களை மேம்படுத்தியதற்காக பிரதமரின் ஸ்வநிதித் திட்டத்திற்கு மத்திய அமைச்சர் திரு சர்பானந்த சோனோவால் பாராட்டு தெரிவித்துள்ளார்

Posted On: 31 AUG 2025 8:35PM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி பிரதமரின் ஸ்வநிதித் திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்துவதன் மூலம் ஏழைகளை ஒருபோதும் கைவிடமாட்டார் என்பதை நிரூபித்துள்ளார்‌ என்று  திப்ருகர் எல்.எஸ்.சி.யின் நாடாளுமன்ற உறுப்பினரான திரு சோனோவால், திப்ருகர், மன்கோட்டா சாலையில் உள்ள அவுனியாட்டி சத்ரா கிளையில் பிரதமரின் சாலையோர வியாபாரிகளின் தற்சார்பு நிதி (பிரதமரின் ஸ்வநிதி) திட்டம் குறித்த பொது நிகழ்ச்சியில் கூறினார். இந்த நிகழ்வை திப்ருகர் மாவட்ட நிர்வாகம் மற்றும் திப்ருகர் நகராட்சி (DMC) இணைந்து ஏற்பாடு செய்திருந்தன. நிகழ்ச்சியின் போது, மத்திய அமைச்சர் இந்த திட்டத்தின் பயனாளிகளுடன் உரையாடினார்.

"பிரதமரின் ஸ்வநிதித் திட்டத்தின் முதன்மையான குறிக்கோள் தற்சார்பு ஆகும். இதன் மூலம், ஒரு தனிநபர் தனது குடும்பத்தை கண்ணியத்துடன் ஆதரிக்க முடியும். பிரதமர் திரு. நரேந்திர மோடி இந்த வலிமையைக் கற்பனை செய்து, ஏழைகள் மற்றும் ஒடுக்கப்பட்டவர்களுக்கு நிதி ரீதியாக அதிகாரம் அளிக்க இந்தத் திட்டத்தை உருவாக்கினார்," என்று திரு. சோனோவால் தனது உரையில் கூறினார்.

நாளின் பிற்பகுதியில், திரு சோனோவால், பொதுமக்களுக்கு மலிவு விலையில் ஜெனரிக் மருந்துகளை வழங்கும் நோக்கில், திப்ருகரில் உள்ள மிலன் நகரில் பிரதமரின் மக்கள் மருந்தக மையத்தைத்  திறந்து வைத்தார்.

***

(Release ID: 2162517)

SS/BR/KR


(Release ID: 2162593) Visitor Counter : 2