மனித வள மேம்பாட்டு அமைச்சகம்
மிரா நட்சத்திரங்கள் குறித்து ஆய்வு
Posted On:
31 AUG 2025 6:23PM by PIB Chennai
வானியல், வானியற்பியல் நிறுவனங்களுக்கு இடையேயான பல்கலைக்கழக மையத்தின் (IUCAA) பேராசிரியர் அனுபம் பரத்வாஜ் தலைமையிலான சமீபத்திய ஆய்வு, நமது பால்வெளி வீதியில் 18 நட்சத்திரத் தொகுப்புகளில் அமைந்துள்ள ஆக்ஸிஜன் நிறைந்த மிரா நட்சத்திரங்களைப் பற்றியதாகும்.
ஆராய்ச்சிக் குழு இந்த மிரா நட்சத்திரங்களை நீண்ட காலத்திற்கு கண்காணித்து, அவற்றின் சராசரி ஒளிர்வு காலங்களை கணித்தது. இந்த ஆய்வு விவரங்கள் அண்மையில் மதிப்புமிக்க வானியற்பியல் இதழில் (Astrophysical Journal) வெளியிடப்பட்டது.
இந்த குளிர் நட்சத்திரங்களின் அடிப்படையில் மிகவும் துல்லியமான அண்ட விரிவாக்க விகிதத்தை தீர்மானிக்க இந்த ஆய்வை மேற்கொண்டதாக ஆய்வின் முதன்மை ஆசிரியர் பேராசிரியர் பரத்வாஜ் கூறினார்.
மிரா பற்றி:
மிரா என்பது செட்டஸ் விண்மீன் தொகுப்பில் உள்ள ஒரு சிவப்பு ராட்சத நட்சத்திரமாகும். இதன் அதிகாரப்பூர்வ பெயர் ஓமிக்ரான் சேட்டி (Omicron Ceti) என்பதாகும். இது கண்டறியப்பட்ட முதல் சூப்பர்நோவா அல்லாத மாறி நட்சத்திரமாகும். "மிரா மாறிகள்" (Mira variables) எனப்படும் நட்சத்திர வகுப்பிற்கு முன்மாதிரியாகவும் இது உள்ளது. இந்த நட்சத்திரம் பூமியிலிருந்து சுமார் 300 ஒளி ஆண்டுகள் தொலைவில் செட்டஸ் (Cetus) விண்மீன் தொகுப்பில் அமைந்துள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2162475
****
(Release ID: 2162475)
AD/PLM/SG
(Release ID: 2162514)
Visitor Counter : 2