தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
azadi ka amrit mahotsav

விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி மகாராஷ்டிரா அஞ்சல் வட்டம் சார்பில் சிறப்பு அஞ்சல் அட்டைகள் வெளியீடு

Posted On: 31 AUG 2025 6:19PM by PIB Chennai

விநாயகர் சதுர்த்தி விழாவைக் கொண்டாடும் வகையில் மகாராஷ்டிரா அஞ்சல் வட்டம் சார்பில் சிறப்பு அஞ்சல் அட்டைகள் வெளியிடும் நிகழ்ச்சி மும்பையில் நடைபெற்றது. பத்மஸ்ரீ விருது பெற்ற திரு அச்சுத் பலவ் ஜி வடிவமைத்த 2 பட அஞ்சல் அட்டைகள் நேற்று (30.08.2025) ஜிஎஸ்பி சேவா மண்டலில் வெளியிடப்பட்டது.

மும்பை பொது அஞ்சலக (ஜிபிஓ) இயக்குநர் திருமதி ரேகா ரிஸ்வி, சிறப்பு பட அஞ்சல் அட்டைகளை வெளியிட்டு, முதல் தொகுப்பை ஜிஎஸ்பி சேவா மண்டல் அமைப்பின் அறங்காவலரும் தலைவருமான திரு ஆர்ஜி பட்-டிடம் வழங்கினார்.

மகாராஷ்டிர அஞ்சல் வட்டத்தின் மூத்த அதிகாரிகள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

***

 

(Release ID: 2162474)

AD/PLM/SG

 

 


(Release ID: 2162513) Visitor Counter : 2