மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம்
azadi ka amrit mahotsav

டிஜிட்டல் இந்தியாவின் மைல்கல் டிஜிட்டல் தளங்களில் 2,000 அரசு சேவைகள் கிடைக்கின்றன - மகாராஷ்டிரா 254 சேவைகளை வழங்கி முன்னணியில் உள்ளது

Posted On: 31 AUG 2025 11:46AM by PIB Chennai

மின்னணுவியல்- தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தேசிய மின்-ஆளுகைப் பிரிவு, டிஜிலாக்கர், -மாவட்ட தளங்களில் அரசின் டிஜிட்டல் சேவைகளை நாடு முழுவதும் ஒருங்கிணைக்கச் செய்கிறது. இதன் மூலம் மற்றொரு குறிப்பிடத்தக்க மைல்கல் எட்டப்பட்டுள்ளது. இந்த சாதனையின் மூலம், நாடு முழுவதும் 36 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் உள்ள மக்கள் இப்போது எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் 2,000 டிஜிட்டல் சேவைகளை தடையின்றி அணுக முடியும்.

ஒருங்கிணைந்த சேவைகள் சான்றிதழ்கள், நலத்திட்டங்கள், அரசு சேவைக்கான கட்டணங்கள், பிற அத்தியாவசிய வசதிகள் உள்ளிட்ட பல்வேறு மக்களின் தேவைகளை இவை உள்ளடக்கியதாக உள்ளன. இதன் மூலம் வசதி, செயல்திறன், சேவை விநியோகம் ஆகியவற்றில் வெளிப்படைத்தன்மை உறுதி செய்யப்படுகிறது. இந்த வளர்ச்சி டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் தொலைநோக்கு பார்வையை உணர்த்துகிறது. காகிதமற்ற டிஜிட்டல் நிர்வாகத்தை வளர்ப்பதிலும், நிலையான வளர்ச்சி இலக்குகளுக்கு பங்களிப்பதிலும் இது ஒரு பெரிய முன்னேற்றத்தைக் குறிக்கிறது.

இந்தியாவின் டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பின் வலுவான தூணாக டிஜிலாக்கர் உருவெடுத்துள்ளது. இது  நாடு முழுவதும் உள்ள மக்களுக்கு நம்பகமான டிஜிட்டல் சேவைகளை வழங்குகிறது.

மின்னணு நடைமுறைகள் மூலம், மகாராஷ்டிராவில் உள்ள மக்கள் இப்போது அதிகபட்சமாக 254 சேவைகளைப் பெறுகின்றனர். அதைத் தொடர்ந்து தில்லி 123, கர்நாடகா 113, அசாம் 102, உத்தரப் பிரதேசம் 86 சேவைகளை மக்களுக்கு வழங்குகின்றன. ஆந்திரப் பிரதேசம் 76, குஜராத் 64 சேவைகளை வழங்குகின்றன. இதேபோல், தமிழ்நாடு, கோவா ஆகிய மாநிலங்கள் தலா 63 சேவைகளை வழங்குகின்றன. மொத்தத்தில், நாடு முழுவதும் உள்ள மக்களுக்கு தற்போது 1,938 சேவைகள் கிடைக்கின்றன.

******

 

(Release ID: 2162403)

AD/PLM/SG

 


(Release ID: 2162459) Visitor Counter : 5