இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்
நாட்டில் முதல்முறையாக ஊட்டச்சத்து துணைப் பொருட்கள் சோதனை பரிந்துரை ஆய்வகங்கள்: மத்திய அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா அறிவிப்பு
प्रविष्टि तिथि:
30 AUG 2025 6:09PM by PIB Chennai
மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம் இன்று புது தில்லியில் விளையாட்டுப் பொருட்கள் உற்பத்தி மாநாட்டிற்கு ஏற்பாடு செய்திருந்தது. இந்தியாவின் விளையாட்டுப் பொருட்கள் சூழல் அமைப்பை வலுப்படுத்தவும், உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கவும் கொள்கை வகுப்பாளர்கள், தொழில் பிரதிநிதிகள் மற்றும் நிபுணர்களை இம்மாநாடு ஒருங்கிணைத்தது.
இந்த மாநாட்டில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம் , இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிலைகள் ஆணையம் மற்றும் நிறுவனங்கள் இடையேயான முத்தரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ் நிறுவப்பட்ட போதை மருந்துகள் மற்றும் மனநலப் பொருட்களின் ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வுக்கான சிறப்பு மையம், தேசிய தடய அறிவியல் பல்கலைக்கழகம், காந்திநகர், குஜராத், பகுப்பாய்வு சோதனை ஆய்வகம், தேசிய மருந்தியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், ஐதராபாத் ஆகிய
இரண்டு ஊட்டச்சத்து துணைப்பொருட்கள் சோதனை ஆய்வகங்களுக்கான என்ஏபிஎல் அங்கீகாரம் மற்றும் இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிலைகள் ஆணையப் பரிந்துரை ஆய்வக ஒப்புதல் தொடர்பாக முறையான அறிவிப்பு வெளியிடப்பட்டது.
மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா இரண்டு நிறுவனங்களையும் பாராட்டி, இந்த முன்னோடி முயற்சியின் முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டினார்.
நாட்டிலேயே முதல் முறையாக, உலக ஊக்கமருந்து எதிர்ப்பு நிறுவனம் (WADA) தடைசெய்யப்பட்ட பொருட்களை ஊட்டச்சத்து மருந்துகளில் பரிசோதிப்பதற்கான சிறப்பு ஆய்வகங்கள் நிறுவப்பட்டுள்ளன. இந்த வசதிகள் ஊட்டச்சத்து மருந்துகளின் பாதுகாப்பையும் தரத்தையும் உறுதி செய்யும், தற்செயலான ஊக்கமருந்து மீறல்களைத் தடுக்கும் மற்றும் விளையாட்டுகளில் நியாயமான விளையாட்டை ஊக்குவிக்கும்.
***
(Release ID: 2162280)
AD/SMB/RJ
(रिलीज़ आईडी: 2162344)
आगंतुक पटल : 24