எரிசக்தி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மாநில எரிசக்தி திறன் குறியீடு 2024 ஐ மத்திய மின்சார அமைச்சகம் வெளியிட்டது

Posted On: 29 AUG 2025 2:27PM by PIB Chennai

மாநில எரிசக்தி திறன் குறியீடு 2024 ஐ மத்திய மின்சார அமைச்சகத்தின் கூடுதல் செயலாளரும் எரிசக்தி திறன் பணியகத்தின் தலைமை இயக்குநருமான திரு ஆகாஷ் திரிபாதி வெளியிட்டார், 2023-24 நிதியாண்டிற்கான 36 இந்திய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் ஆற்றல் செயல்திறன் மதிப்பிடப்பட்டுள்ளது.  மாநில அளவிலான தரவு கண்காணிப்பை நிறுவனமயமாக்குதல், எரிசக்தி தடம் மேலாண்மையை கண்காணித்தல், சிறந்த நடைமுறைகளை ஊக்குவித்தல் மற்றும் மாநிலங்கள் முழுவதும் எரிசக்தி திறனில் போட்டித்தன்மை வாய்ந்த மேம்பாடுகளை வளர்ப்பதில் இந்தக் குறியீடு முக்கிய பங்கு வகிக்கிறது.

இந்தக் குறியீட்டில், மகாராஷ்டிரா, ஆந்திரா, திரிபுரா, அசாம் ஆகிய மாநிலங்கள் முன்னனியில் உள்ளன.

எரிசக்தி திறன் குறியீடு- 2023 உடன் ஒப்பிடும்போது, முன்னணியில் உள்ள மாநிலங்களின் எண்ணிக்கை ஏழிலிருந்து ஐந்தாகக் குறைந்துள்ளது, ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா, மகாராஷ்டிரா, தெலுங்கானா மற்றும் தமிழ்நாடு இந்த நிலையைத் தக்கவைத்துக்கொள்கின்றன. அசாம் மற்றும் கேரளா ஆகிய இரண்டு மாநிலங்கள் சாதனையாளர் பிரிவில் இடம்பெற்றுள்ளன, அதே நேரத்தில் ஹரியானா, பஞ்சாப், ராஜஸ்தான், ஒடிசா மற்றும் உத்தரப் பிரதேசம் போட்டியாளர்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.

நிகழ்ச்சியில் பேசிய திரு திரிபாதி, இந்தியாவின் எரிசக்தி மாற்றம் என்பது பருவநிலை கட்டாயங்களுக்கான பதில் மட்டுமல்ல - இது புதுமை, மீள்தன்மை மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை வளர்ப்பதற்கான ஒரு  வாய்ப்பாகும். 2070-ம் ஆண்டுக்குள் நிகர-பூஜ்ஜிய உமிழ்வை அடைவதற்கும் 2030-ம் ஆண்டுக்குள் உமிழ்வு தீவிரத்தில் 45% குறைப்புக்கும் நமது பாதையை நாம் பட்டியலிடும்போது, எரிசக்தி திறன் ஒரு அடித்தள தூணாக வெளிப்படுகிறது, இது அனைத்தையும் குறைக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும், குறைந்த விலை தீர்வுகளை வழங்குகிறது. மாநில எரிசக்தி திறன் குறியீடு-2024 இதற்கு வழிவகுக்கும் என்று கூறினார்.

எரிசக்தி திறன் குறியீடு- 2024, துணை தேசிய எரிசக்தி திறன் நடவடிக்கைகளை வழிநடத்தி, இந்தியாவின் எரிசக்தி மாற்றத்தை ஆதரிக்கும் ஒரு முக்கியமான கொள்கை கருவியாகத் தொடர்ந்து செயல்படுகிறது. இந்தியாவின் பரந்த பருவநிலை மற்றும் எரிசக்தி பாதுகாப்பு இலக்குகளுக்கு பங்களிக்கும் வகையில், மாநிலங்கள் தங்கள் எரிசக்தி திறன் செயல்திறனை மேம்படுத்த உதவும் செயல்திறனுள்ள நுண்ணறிவுகளை இந்தக் குறியீடு வழங்குகிறது.

----

(Release ID: 2161803)

AD/PKV/KR/DL


(Release ID: 2162004) Visitor Counter : 12